தியேட்டரில் எடுபடாத கொட்டுக்காளி.. சர்வதேச விருதை வென்றது.. மகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன்!
சென்னை: கூழாங்கல் திரைப்படத்தின் மூலம் பல விருதுகளை பெற்று ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜன் இயக்கிய திரைப்படம் தான் கொட்டுக்காளி. சூரி கதாநாயகனாக நடித்த இத்திரைப்படம் மீண்டும் ஒரு விருதை வென்று தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
காமெடியனாக நடித்து வந்த நடிகர் சூரி, வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் கதாநாயகனாக கன்ஸ்டபிலாக நடித்திருந்தார். அந்த படத்தைத் தொடர்ந்து கருடன் படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் வெற்றிப்படமாக அமைந்ததைத் தொடர்ந்து. சூரியின் நடிப்பில் கொட்டுக்காளி திரைப்படம் வெளியானது. இப்படத்தை சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்தில் மலையாள நடிகை அன்னா பென் லீட் ரோலில் நடித்திருந்தார்.

படத்தின் கதை: மதுரையில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் மீனா (அன்னா பென்) இவர் எந்த நேரமும் பிரம்மை பிடித்தது போல எதையோ பார்த்துக் கொண்டு இருப்பதால், இவரது குடும்பத்தினர் மீனாவிற்கு பேய் பிடித்திருப்பதாக நினைக்கின்றனர். இதனால், வருங்கால கணவரான பாண்டி (சூரி) மற்றும் அவரது குடும்பத்தினருடன் பேயை விரட்ட சாமியாரிடம் அழைத்துச் செல்கின்றனர். அவர்கள் செல்லும் வழியில் சில சம்பவங்கள் நடக்கின்றன. அவை என்ன? உண்மையில் மீனாவிற்கு பேய் பிடித்து இருக்கிறதா? என்பது தான் கொட்டுக்காளி படத்தின் கதை.
ஒடிடி ரிலீஸ்: ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் பல விருதை பெற்ற போதும்,வசூலை சரியான அடிவாங்கியது. இந்த திரைப்படத்தோடு வெளியான மாரிசெல்வராஜின் வாலை, டிமாண்டி காலனி 2 திரைப்படங்கள் நல்ல வசூலை வென்றுள்ளன. இதைத்தொடர்ந்து இப்படம் செப்டம்பர் மாதம் அமேசான் பிரைம் மற்றும் சிம்பிலி சவுத் ஓடிடி தளங்களில் வெளியானது. ஆனால், அதிலும் கொட்டுக்காளி படத்தை யாரும் கண்டுகொள்ளவே இல்லை.
சர்வதேச விருது: இந்நிலையில், கொட்டுக்காளி திரைப்படம், இந்தோனேஷியாவில் நடைபெற்ற அல்டர்நேட்டிவா திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் இப்படம் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்ததோனேஷியாவில் அல்டர்நேட்டிவா பிலிம் ஃபெஸ்டிவல் அவார்ட்ஸ்ட்24 விழா நவம்பர் 22 ஆம் தேதி முதல் நவம்பர் 28 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த விழாவில், உலகம் முழுவதும் பல மொழிகளில் சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டன. இதில் சிறந்த திரைப்படமாக கொட்டுக்காளி விருதை வென்றது. இது குறித்து பேசிய கருத்து தெரிவித்த சிவகார்த்திகேயன், கொட்டுக்காளி படம் நேட்டிவா விருது வென்று இருப்பதை வென்றுள்ளது. எங்களது பயணத்திற்கு ஆதரவளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











