தாய்மாமன் உறவை போற்றும் மாமன்.. குடும்பங்களை கவர்ந்த மாமன் டிரெய்லர்.. சூரியின் புது அவதாரம்

சென்னை: விலங்கு வெப் தொடரின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பிரசாந்த் பாண்டியராஜன். தற்போது நடிகர் சூரியை வைத்து மாமன் படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் குறித்த அறிவிப்பு வெளியான நாள் முதலே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. மாமன் படம் மே மாதம் வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டிரைலரை பார்த்த ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுக தொடங்கியுள்ளனர்.

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், லப்பர் பந்து ஸ்வாசிகா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் திரைப்படம் மாமன். இப்படம் தாய்மாமன் உறவை பற்றி பேசும் படமாக உருவாகியிருக்கிறது. குடும்பங்கள் கொண்டாடும் வகையிலான கதையை தேர்ந்தெடுத்து சூரி நடித்துள்ளார். குடும்பங்களில் ஒருவராக காமெடியில் கலக்கி வந்த சூரி முதல் முறையாக குடும்பத்தை தாங்கும் மாமனாகவும், மகனாகவும், கணவராகவும் நடிப்பில் ஸ்கோர் செய்ய காத்திருக்கிறார். விடுதலை படத்திற்கு பிறகு கருடன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. சூரியின் கரியரில் நல்ல வசூலை தந்திருக்கும் படமாக இருந்தது. இதைத்தொடர்ந்து மாமன் படமும் அதேபோன்ற வரவேற்பை பெற காத்திருக்கிறது. மாமன் திரைப்படம் நட்சத்திரங்கள் நிறைந்த விழாவாக ரசிகர்கள் திரையில் காண இருக்கிறார்கள்.

sooris-maaman-movie-trailer-get-positive-response

மாமன் பட டிரெய்லர்: பேமிலி ஆடியன்ஸை கவரும் விதமாக தரமான குடும்ப சென்டிமென்ட் கலந்த படைப்பாக மாமன் படம் தயாராகியுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தி்ல் லப்பர் பந்து ஸ்வாசிகா அக்காவாகவும், சூரி தம்பியாகவும் இப்படத்தில் நடித்துள்ளனர். தனது அக்கா குழந்தை வயிற்றில் இருக்கும்போதே பாசத்தை பொழியும் மாமனாக சூரி ஐஸ் கட்டி போல் உருக வைக்கிறார். தாயை போல அக்க குழந்தையை வளர்த்து வருகிறார். இதனிடையே குடும்பத்திற்குள் ஏற்படும் சண்டை, சிக்கலால் குடும்பம் இரண்டாக பிரிகிறது. யார் என்ன சொன்னாலும், யார் தடுத்தாலும் நான் உன்னை விட்டு போகமாட்டேன் என சூரி சொல்லும் அந்த வார்த்தை தாய் மாமனாக மக்கள் மனதில் உயர்ந்துவிட்டார். அக்கா மகனை எந்த சூழலிலும் விட்டுகொடுக்காத மாமனாக இருப்பது இந்த டிரெய்லர் வெளிப்படுத்துகிறது. இப்படத்தில் காதல், ரொமான்ஸ், சென்டிமென்ட் ஆக்சன் காட்சிகள் அனைத்திலும் இறங்கி அடித்திருக்கிறார் சூரி.

sooris-maaman-movie-trailer-get-positive-response

குடும்பங்களை கவரும் டிரெய்லர்: விடுதலை படத்தில் அப்பாவி கான்ஸ்டபில் முருகேசனாக வந்து அனைவரது இதயத்தையும் கவர்ந்தார் சூரி. இப்படத்தில் அவர் நடிப்பதே தெரியாத அளவிற்கு கதாப்பாத்திரம் மனதில் நின்றது. ஆனால், மாமன் படம் அவரது முந்தைய படங்களை காட்டிலும் மாறுபட்டு இருக்கிறது. குடும்பத்தை கவரும் விதமான ஒரு படைப்பாக உருவாகியிருக்கிறது. தமிழகத்தில் அப்பா, அம்மாவை காட்டிலும் தாய் மாமன் உறவை போற்றும் குடும்பங்கள், சொந்தங்கள் வாழ்ந்துகாண்டு தான் இருக்கின்றனர். தொப்புள் கொடி அறுத்தாலும் தாய் மாமன் உறவு அதற்கு மேல் என பாடல்களும் வலியுறுத்தியுள்ளன. அந்த வகையில் மாமன் பட டிரெய்லரை பார்த்து ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுகிறார்கள். நடிகர் சூரி மாமனாக மாறி கலங்க வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். டிரெய்லரில் இடம்பெறும் மலை போல மாமன் இருக்கேன் என்ற வசனம் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கிறது. தற்போது வெளியாகும் படங்கள் கொலை, கொள்ளை என ரத்தக்களறியாக எடுத்து இதுபோன்ற படைப்பை அழித்து வருவதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். மீண்டும் ஒரு குடும்ப படைப்பை பார்க்க மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X