நாங்களும் சொல்வோம் "பா.ஜ.க. வின் பாசிச ஆட்சி ஒழிக! ": திரையுலக பிரபலங்கள் குமுறல்
Recommended Video

சென்னை: "பா.ஜ.க. வின் பாசிச ஆட்சி ஒழிக! " என்று நாங்களும் சொல்வோம் என திரையுலக பிரபலங்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
பாஜகவுக்கு எதிராக கோஷமிட்டதால் மாணவி சோபியா கைது செய்யப்பட்டது மாணவ சமுதாயத்தை மட்டும் அல்ல ஒட்டு மொத்த மக்களையும் கோபம் அடைய வைத்துள்ளது.
ஜனநாயக நாட்டில் கோஷமிடக் கூட உரிமை இல்லையா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது குறித்து திரையுலகினரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.
கமல் ஹாஸன்
பொது இடங்களில் குரல் எழுப்புவதும்,விமர்சிப்பதும் குற்றமெனில் அத்தனை அரசியல்வாதிகளும் கைது செய்யப் படவேண்டிய குற்றவாளிகளே. சுதந்திரப்பறவை சோபியாவை சிறையிலிருந்து பெயிலில் எடுக்கிறோம்.அரசியல்வாதிகள் ஏன் வெளியே திரிகிறார்கள்?
நானும் அரசியல்வாதிதான் என்பதை உணர்ந்தே சொல்கிறேன் என்று கமல் ஹாஸன் ட்வீட்டியுள்ளார்.
ராஜுமுருகன்
கேள்வி கேட்டால் கைது, உண்மை பேசினால் வழக்கு ... நம்மிடம் இருப்பது ஒரே ஆயுதம் ... ஒன்றுகூடு ... #உரக்கப்பேசு #SpeakUp #HallaBol
#பாசிசபாஜக_ஆட்சிஒழிக என்று இயக்குனர் ராஜுமுருகன் ட்வீட் செய்துள்ளார்.
கஸ்தூரி
சோபியா கைது செய்யப்பட்டதை எதிர்த்து நடிகை கஸ்தூரி ட்வீட்டியுள்ளார். அதில் பாசிசம் என்றால் என்ன என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
பா. ரஞ்சித்
ஜனநாயகத்தின் குரல் #sophia #தமிழகஅரசே_விடுதலைசெய் #பாசிசபாஜக_ஆட்சிஓழிக என்று இயக்குனர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
உதயநிதி
நானும் சொல்கிறேன் !
"பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக! "
#FacsistBJP #பாசிசபாஜகஆட்சிஒழிக என்கிறார் உதயநிதி ஸ்டாலின்
குஷ்பு
பாஜக பிடியில் இருக்கும் அதிமுக அரசுக்கு காது கேட்காது, பேச வராது என்று தெரிவித்துள்ளார் நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு.


Click it and Unblock the Notifications











