2.0 படத்தை யார் இன்னும் பார்க்கலைன்னு பாருங்க
சென்னை: சோபியா ரோபோ இன்னும் 2.0 படத்தை பார்க்கவில்லையாம்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்த 2.0 படம் கடந்த மாதம் 29ம் தேதி ரிலீஸானது. படம் பாக்ஸ் ஆபீஸில் அசுர வேட்டை நடத்தியுள்ளது.

இந்நிலையில் 2.0 படத்தை பார்த்துவிட்டீர்களா என்று ஒருவர் சோபியா ரோபோவிடம் ட்விட்டரில் கேட்டார். அதற்கு ரோபோ அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது,
நான் ரொம்ப பிசியாக உள்ளேன். இன்னும் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தவறாக நினைக்க வேண்டாம், ப்ளீஸ் என்று தெரிவித்துள்ளதுடன் #Shankar #2Point0 #AskSophia ஆகிய ஹேஷ்டேகுகளையும் பயன்படுத்தியுள்ளது.
தானாக சிந்தித்து மனிதர்களை முகபாவனைகளை பார்த்து பதில் அளிக்கும் சோபியா ரோபோவுக்கு சவுதி அரேபியா குடியுரிமை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications