பிகினியோடு பீச்சில் படுத்துக்கொண்டு பிரபல நடிகை கேட்கும் கேள்வியை பாருங்க.. ரசிகர்கள் ரணகள கமென்ட்!

By

சென்னை: பீச்சில் பிகினியில் படுத்தபடி பிரபல நடிகை கேட்டுள்ள கேள்விக்கு ரசிகர்கள் ஜாலியான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Recommended Video

படு கிளாமராக ஃபிட்னஸ் டிப்ஸ் குடுக்கும் சோஃபி சவுத்ரி - வீடியோ

விஷால், சமீரா ரெட்டி, விவேக் நடித்த 'வெடி' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தவர், இந்தி நடிகை ஷோபி சவுத்ரி.

இந்தியில், ஷாதி நம்பர் 1 என்ற படம் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து, பியார் கே சைட் எபெக்ட்ஸ், ஐ சீ யூ, கிட்நாப், டாடி கூல், ஷூட் அவுட் வடலா உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

புதிய ஸ்டில்ஸ்

புதிய ஸ்டில்ஸ்

இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ள ஷோபி, சிறந்த பாடகியும் கூட. அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். லாக்டவுனுக்கு முன்பே, அவர் அப்படித்தான். லாக்டவுடனுக்குப் பிறகு மற்ற நடிகைகளை போலவே, இவரும் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அது அவர்களுக்கு டைம் பாஸ்.

சுட்டதோ, சொந்தமானதோ

சுட்டதோ, சொந்தமானதோ

இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பதிவிடும் ஜாலி, கேலி கமென்ட்களும் கொத்துக்கொத்தாக குவியும் லைக்ஸ்களையும் விரும்புகிறார்கள், சில நடிகைகள். அதற்காகவே நச் கேப்ஷனுடன், தங்களது கிளாமர் போட்டோக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த கேப்ஷன்கள் சுட்டதோ, சொந்தமானதோ, அதையும் நெட்டிசன்கள் ரசித்து கமென்ட் போடுவார்கள்.

கவித்துவ கேப்ஷன்

கவித்துவ கேப்ஷன்

நடிகை ஷோபி சவுத்ரியும் தனது புகைப்படங்களுக்கு கவித்துவமாக கேப்ஷன் கொடுப்பார். கடந்த சில நாட்களுக்கு முன் அவர் வெளியிட்ட புகைப்படங்களை, ரசிகர்கள் வைரலாக்கினர்.இப்போது பிகினி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். முகத்தைத் தொப்பியால் மூடியபடி, கடற்கரை மணலில் ஹாயாக படுத்திருக்கும் அந்தப் புகைப்படத்துக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளித் தெளித்துள்ளனர்.

ரசிகர்கள் தாறுமாறு

ரசிகர்கள் தாறுமாறு

இந்த போட்டோவுக்கு கேப்ஷனாக, '2020-ம் வருஷம் எப்ப முடியுதோ, அப்ப என்னை உசுப்புங்க' என்று பதிவிட்டுள்ளார், ஜாலியாக. இதற்கு ரசிகர்கள் தாறுமாறாக, கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். பிகினி உங்களுக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது என்றும் அடிக்கடி பிகினி போட்டோ போடுங்க என்றும் சில நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். சிலர், இன்னும் குளோசப்ல போட்டோவை எடுத்திருக்கலாமே? என்று கூறியுள்ளனர்.

நம்பரை அனுப்புங்க

நம்பரை அனுப்புங்க

ஒருவர், 'கொரோனா முடிஞ்சதும் நீங்க எங்களை உசுப்பறீங்களா, புண்ணியமா போகும்' என்று கிண்டலாகக் கூறியுள்ளார். 'அப்படியா, உங்க நம்பரை அனுப்புங்க, நான் உங்களை உசுப்புறேன்' என்று சிலர் கமென்ட் போட்டுள்ளனர். நீங்க என்ன குழந்தையா? உங்களை உசுப்பறதுக்கு? என்று ஒருவர் கூறியுள்ளார். இன்னொரு ரசிகர், 'அப்ப ஆறுமாசம் கும்பகர்ணன் ஆகப் போறீங்களா? என்று கேட்டுள்ளார்.

ஆரோக்கியமாக

ஆரோக்கியமாக

கடந்த சில நாட்களுக்கு முன் ஷோபி அளித்த பேட்டியில், 'சமூக வலைத்தளங்களில் ஒர்க் அவுட் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிடுவதால், அவர்கள் இதைத்தவிர வேறு எதையும் செய்வதில்லை என்று அர்த்தமில்லை. இப்படித்தான் தங்கள் மனதை ஆரோக்கியமாக வைத்திருக்கிறார்கள் என்கிற பாசிட்டிவான விஷயத்தைச் சொல்லத்தான். ஆனால், அதை மட்டுமே செய்துகொண்டிருக்கவில்லை. எனக்கு மற்ற வேலைகளும் இருக்கின்றன' என்று தெரிவித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X