இந்த போட்டோவுல, வழக்கமா வர்ற உங்க ஸ்மைல் எங்க போச்சு..? பிக்பாஸ் பிரபலத்திடம் கேட்கும் ஃபேன்ஸ்!
மும்பை: பிரபல பிக்பாஸ் நடிகையின் புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
விஷால், சமீரா ரெட்டி, விவேக் நடித்த 'வெடி' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தவர், இந்தி நடிகை ஷோபி சவுத்ரி.
இந்தியில், ஷாதி நம்பர் 1 என்ற படம் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து, பியார் கே சைட் எபெக்ட்ஸ், ஐ சீ யூ, கிட்நாப், டாடி கூல், ஷூட் அவுட் வடலா உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

புதிய ஸ்டில்ஸ்
இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். இவர், அடிக்கடி தனது ஹாட் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கம். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட புகைப்படங்கள், ஓவர் கிளாமராக இருந்தன. இதற்கு ரசிகர்கள் தாறுமாறாக, கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர். இப்போது புதிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

கவிதைத்தனமாக
ஒவ்வொரு போட்டோ பதிவிடும்போதும் கவிதைத்தனமாக கேப்ஷன் கொடுப்பார். அது சுட்டதோ, சொந்தமானதோ, அதையும் நெட்டிசன்கள் ரசித்து கமென்ட் போடுவார்கள். இப்போதும் கவிதையாகக் கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் வெளியான சில நிமிடங்களிலேயே, ஏராளமானோர் லைக் செய்துள்ளனர்.

புதையல்களை
புகழ்பெற்ற மெக்சிக்கோ நாட்டுப் பெண் ஓவியரான ஃபிரிடா காலோ (Frida Kahlo) வின் மேற்கோளை கேப்ஷனாக குறிப்பிட்டுள்ள ஷோபி, அதற்கு கீழே, உங்களை இன்னும் தெரிந்து கொள்ளவும் உங்களை கவனித்துக் கொள்ளவும் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் உங்கள் அலமாரிகளில் பழைய புதையல்களை கண்டுபிடிக்கவும் இந்த நேரத்தைப் பயன்படுத்துங்கள். ஏனென்றால் கற்றுக் கொள்வதை ஒரு போதும் நிறுத்தக் கூடாது' என்று கூறியுள்ளார்.

தேவதை மாதிரி
இதற்கு ரசிகர்கள் சரமாரியாக கமெட்ன்களை அள்ளிக் குவித்துள்ளனர். சிலர், நீங்க அணிந்த உடைகளிலேயே இதுதான் சிறப்பானது என்று கூறியுள்ளனர். சிலர், வழக்கமா வர்ற உங்க ஸ்மைல் இதில் இல்லையே? என்றும் ஏன் டயர்டா தெரியறீங்க? என்றும் கேட்டுள்ளனர். சில நெட்டிசன்கள் இதற்கு மாறாக, நீங்க இந்த டிரெஸ்ல தேவதை மாதிரி தெரியறீங்க என்று கூறியுள்ளனர்.

அழகா இருக்கு
'நீங்க எந்த டிரெஸ் போட்டாலும் அழகுதான். உங்களால இந்த டிரெஸ்சுக்கு அழகு கூடியிருக்கு' என்று ஒரு ரசிகர் வழிந்திருக்கிறார். உங்களை மாதிரியே, உங்க கேப்ஷனும் அழகா இருக்கு என ஒருவர் தெரிவித்துள்ளார். இன்னொருவர், நல்லவர்கள் எங்கிருந்தாலும் சொர்க்கத்தை உருவாக்குவார்கள் என்பது உண்மை. அப்படியா? என்று கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











