ஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி

By Siva

Recommended Video

அரைகுறை ஆடையில் ஆபாசம் அடிதடி நிறைந்த சொப்பன சுந்தரி- வீடியோ

சென்னை: சன் லைஃப் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் சொப்பன சுந்தரி நிகழ்ச்சி மிகவும் ஆபாசமாக உள்ளது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

சன் லைஃப் தொலைக்காட்சியில் மாடல் அழகிகள் கலந்து கொண்டுள்ள நிகழ்ச்சியான சொப்பன சுந்தரி சனி மற்றும் ஞாயிறுதோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

நிகழ்ச்சியை நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்கி வருகிறார்.

அநாகரீகம்

பெயர் மட்டும் அல்ல நிகழ்ச்சியுமே ஒரு மார்க்கமாக தான் உள்ளது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள இளம்பெண்கள் ஆபாசமாக உடை அணிகிறார்கள். உடை அணிவதை விடுங்க, அவர்கள் காட்டும் முகபாவனைகளில் சில மிகவும் மோசமானதாக உள்ளது. ஆண்களின் உணர்ச்சியை தூண்டிவிடும் வகையில் முகபாவனை செய்கிறார்கள்.

ஆபாசம்

ப்ரொமோ வீடியோக்களை கண் கொண்டு பார்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு அந்த பெண்கள் அரைகுறை ஆடையில் ஆபாச செய்கைகள் செய்கிறார்கள். நிகழ்ச்சியை மட்டும் அல்ல ப்ரொமோவை பார்த்தாலும் முகம் சுளிக்கும்படி உள்ளது. ஆனால் அதை பார்த்து ஜொள்ளு விடுபவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.

சச்சரவு

ஆபாசம் மட்டும் அல்ல சண்டை, சச்ரவுக்கும் குறைச்சலே இல்லை. மாடல்கள் என்றாலே அங்கம் எல்லாம் தெரியும்படி உடை அணிய வேண்டும் என்று ஏதாவது விதிமுறை உள்ளதா?. கலாச்சாரத்திற்கு பெயர் போன தமிழகத்தில் இப்படி ஒரு ஆபாசமான நிகழ்ச்சி ஒளிபரப்பாவதை பார்த்து பலரும் கொந்தளித்துள்ளனர்.

போட்டோஷூட்

இந்த ப்ரொமோ வீடியோவை பார்க்க சகிக்கவில்லை. இப்படியொரு போட்டோஷூட் செய்ய வேண்டும் என்ற அவரின் ஆசை இந்த நிகழ்ச்சி மூலம் நிறைவேறிவிட்டதாம். நல்லா வருவீங்கம்மா நீங்க.

இது தானா?

சன் லைஃப் தொலைக்காட்சியின் புதுப்பொலிவு இது தானா?. பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து ஆபாசமாக உள்ளது என்று கூறியவர்கள் எல்லாம் தற்போது அது தவறு என்பதை புரிந்து கொண்டுள்ளனர். சொப்பன சுந்தரியுடன் ஒப்பிடும்போது பிக் பாஸ் 2-ல் கவர்ச்சியே இல்லை எனலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X