ஓவராகப் போகும் சொப்பன சுந்தரிகள்: இதை கேட்க யாருமே இல்லையா?
சென்னை: சொப்பன சுந்தரி நிகழ்ச்சியின் விளம்பர புகைப்படங்கள் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கின்றன.
சன் லைஃப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சொப்பன சுந்தரி நிகழ்ச்சி கவர்ச்சியை மட்டுமே வைத்து ஓடுகிறது. மாடல் அழகிகள் குட்டிப் பாப்பாவாக இருந்தபோது எடுத்த உடையை எல்லாம் தற்போது அணிகிறார்கள்.
அவர்கள் உணவுப் பொருட்களை வைத்து மானத்தை மறைத்து எடுத்த போட்டோஷூட்டை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்களுக்கு மேலும் அதிர்ச்சி காத்திருக்கிறது.
ஆண்கள்
மாடல் அழகிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆண் ஜோடியை கொண்டு வந்துள்ளனர். அவர்களுக்கு இடையே இருக்கும் கெமிஸ்ட்ரியை பார்க்கப் போகிறார்களாம். ப்ரொமோவை பார்த்ததுமே இது அந்த மாதிரி நிகழ்ச்சியா என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்யத் துவங்கிவிட்டனர்.
போட்டோஷூட்
சொப்பன சுந்தரிகளை அவர்களுக்கான ஆணுடன் சேர்த்து தம்பதி சகிதமாக போட்டோஷூட் எடுத்துள்ளார்கள். அவர்களின் போஸ் மற்றும் உடையை பார்த்தால் நமக்கு வெட்கமாக உள்ளது.
ஆபாசம்
இதற்கு பெயர் ஸ்டைலா, ஆபாசம் என்று தான் சொல்ல வேண்டும். இதை எல்லாம் சென்சார் செய்ய யாருமே இல்லையா, இது என்ன அந்த மாதிரி டிவியா என்று நெட்டிசன்கள் கேட்கிறார்கள்.
அழகிகள்
மாடல் அழகிகள் நிகழ்ச்சி என்பதற்காக இந்த அளவுக்கு கவர்ச்சி காட்டுவதா?
விமர்சனம்
இந்த கருமத்தை என்ன சொல்ல?
சந்தேகம்
இதை எல்லாம் பார்த்தால் இது தமிழகத்தில் நடக்கும் நிகழ்ச்சி தானா என்ற சந்தேகம் வருகிறது.


Click it and Unblock the Notifications











