'வருத்தம் தெரிவிக்கிறேன்..' பட்டாக் கத்தியால் கேக் வெட்டிய விவகாரம்.. விஜய் சேதுபதி விளக்கம்!

By

சென்னை: பட்டாக்கத்தியால் பிறந்த நாள் கேக்கை வெட்டியது ஏன் என்பது பற்றி நடிகர் விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார்.

Recommended Video

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பிறந்த நாள் இன்று..!

நடிகர் விஜய் சேதுபதிக்கு இன்று 43 வது பிறந்த நாள். இதையடுத்து திரையுலகினர், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து ட்விட்டரில் #HBDVijaySethupathi என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

பிறந்த நாள் கேக்

பிறந்த நாள் கேக்

இதற்கிடையே, அவர் தனது பிறந்த நாள் கேக்கை பட்டாக்கத்தியால் வெட்டும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அந்தப் புகைப்படத்தில், இயக்குனர் பொன்ராம் உட்பட சிலர் இருக்கின்றனர். அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள சில நெட்டிசன்ஸ், இது சரிதானா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதே நடவடிக்கை

அதே நடவடிக்கை

இதற்கு முன், வாளால் கேக் வெட்டிய சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். முன்னணி நடிகரான விஜய் சேதுபதி இப்படி கேக் வெட்டுவது சரிதானா? அதே போன்ற நடவடிக்கையை இவர் மீது எடுப்பார்களா? என்றும் கூறியுள்ளனர். இவரை பின்பற்றி ரசிகர்களும் இதே போல் கேக் வெட்டினால் என்னாவது என்றும் சிலர் கூறியுள்ளனர்.

விவாதமாகி இருக்கிறது

விவாதமாகி இருக்கிறது

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி பட்டாகத்தியால் கேக் வெட்டியது பற்றி விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. இதை முன்னிட்டு 3 நாட்களுக்கு முன்பு எனது அலுவலகத்தில், பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

பட்டாக் கத்தி

பட்டாக் கத்தி

அதில், பிறந்த நாள் கேக்கை பட்டாக் கத்தியால் வெட்டியிருப்பேன். தற்போது பொன் ராம் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க இருக்கிறேன். அந்தப் படத்தின் கதைப்படி ஒரு பட்டாக் கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும். ஆகையால், அந்தப் படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடும்போது அதே பட்டாக் கத்தியை வைத்து கேக் வெட்டினேன்.

புண்படுத்தி இருந்தால்

புண்படுத்தி இருந்தால்


இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து விவாதமாகி உள்ளது. இனிமேல் இது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சம்பவம் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன். இவ்வாறு விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X