twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாற்றுத்திறனாளி குழந்தைகளின் மனதை நோகடித்த பிருத்விராஜ்.. எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மன்னிப்பு!

    |

    திருவனந்தபுரம்: நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்த வாரம் வெளியான படம் கடுவா.

    இயக்குநர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை இழிவுப்படுத்தும் விதமாக அவர்கள் மனதை நோகடிக்கும் விதமாக ஒரு வசனம் இடம் பெற்று இருந்தது.

    அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்ட நிலையில், இயக்குநர் ஷாஜி கைலாஷ் மற்றும் நடிகர் பிருத்விராஜ் தற்போது தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுள்ளனர்.

    வயிற்றில் குழந்தையுடன் ஹாலிவுட் படத்தில் நடித்து வரும் ஆலியா பட்.. ரன்பீர் கபூர் ஐடியா என்ன? வயிற்றில் குழந்தையுடன் ஹாலிவுட் படத்தில் நடித்து வரும் ஆலியா பட்.. ரன்பீர் கபூர் ஐடியா என்ன?

    கமர்ஷியலில் இறங்கிய பிருத்விராஜ்

    கமர்ஷியலில் இறங்கிய பிருத்விராஜ்

    ஜன கண மண படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நிலையில், அந்த படம் பாக்ஸ் ஆபிஸ் ரீதியாக பெரிய வரவேற்பை பெறவில்லை என்பதால், அடுத்ததாக இயக்குநர் ஷாஜி கைலாஷ் உடன் கை கோர்த்த பிருத்விராஜ் மலையாளத்தில் இந்த முறை கமர்ஷியல் படத்தை எடுத்துக் காட்டுகிறோம் என கம்பு சுற்றினார். ஆனால், படம் வெளியான பிறகு கலவையான விமர்சனங்களையே பெற்றன. மேலும், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் அவர் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. கேரளாவிலும் அந்த படத்தை கடுமையாக விமர்சித்து தள்ளினர்.

    மாற்றுத்திறனாளிகளை இழிவுப்படுத்தி

    மாற்றுத்திறனாளிகளை இழிவுப்படுத்தி

    கடுவா படம் கமர்ஷியல் ஹிட் கொடுக்கும் என நினைத்த பிருத்விராஜுக்கு அந்த படத்தில் இடம்பெற்ற ஒரு வசனம் மாற்றுத்திறனாளி குழந்தைகளை மிகவும் இழிவுப்படுத்தும் விதமாக இருந்ததை ஏன் தடுக்கவில்லை என்கிற கேள்வியுடன் அவருக்கு எதிரான எதிர்ப்புகள் சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாக பரவின. பலரும் நடிகர் பிருத்விராஜ் மற்றும் அந்த வசனத்தை எழுதிய இயக்குநர் ஷாஜி கைலாஷ் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என கண்டனம் தெரிவித்தனர்.

    பாய்ந்தது வழக்கு

    பாய்ந்தது வழக்கு

    மாற்றுத்திறனாளி ஆணையத் தலைவர் பஞ்சாபகேஷன் இப்படியொரு மோசமான வசனத்தை படத்தில் வைத்தது ஏன் என்பதற்கு விளக்கம் கேட்டு படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இயக்குநர் ஷாஜி கைலாஷ், நடிகர் பிருத்விராஜ் மற்றும் தயாரிப்பாளர் சுப்ரியாமேனன் உள்ளிட்டோருக்கு இதுதொடர்பான நோட்டீஸ் சென்றதும் கேரள திரையுலகில் பெரும் விவாதத்தை இது கிளப்பியது.

    காட்சி நீக்கம்

    காட்சி நீக்கம்

    உடனடியாக படத்தில் இருந்த அந்த காட்சியையும், வசனத்தையும் படக்குழுவினர் தற்போது நீக்கி உள்ளனர். மேலும், இயக்குநர் ஷாஜி கைலாஷ் மன்னிப்பு கேட்டு இத் தொடர்பான நீண்ட விளக்கத்தை மலையாளத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவ்வளவு பெரிய இயக்குநர் ஏன் இப்படியொரு விஷயத்தை செய்தார் என பலரும் அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

    Recommended Video

    பத்திரிக்கையாளர்களுக்கு பதிலளித்த Prithviraj| Kaduva Movie Press Meet *Kollywood |Fimibeat
    பிருத்விராஜ் மன்னிப்பு

    பிருத்விராஜ் மன்னிப்பு

    இயக்குநர் ஷாஜி கைலாஷ் அளித்த விளக்கத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் பிருத்விராஜ், இது மிகப்பெரிய தவறு தான், நாங்கள் அதை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்கிறோம். இனிமேல் இதுபோன்ற அஜாக்கிரதை நடக்காது என்றும் நடிகர் பிருத்விராஜ் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    அப்படி என்ன வசனம்

    "அப்பா அம்மா பாவம் செஞ்சாத்தான் பிள்ளைகள் இப்படி ஊனமாக பிறப்பாங்க" என பிருத்விராஜ் பேசும் பஞ்ச் வசனம் போல அதை வைத்து இருந்தது தான் இத்தனை பெரிய பஞ்சாயத்துக்கும் காரணம். தற்போது, குறிப்பிட்ட அந்த வசனத்தை படக்குழு நீக்கி உள்ளது. மேலும், நடிகர் பிருத்விராஜ், இயக்குநர் ஷாஜி கைலாஷ் உள்ளிட்டோர் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளனர்.

    English summary
    Prithviraj Sukumaran tweeted, "Sorry. It was a mistake. We acknowledge and accept it" after a scene in his latest release movie Kaduva with insensitive dialogue stirs controversy.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X