”தம்பி சார்”.. ரோலக்ஸ் மோடுக்கே சூர்யாவை வைத்திருக்க விரும்பும் கமல்.. அடுத்த சம்பவம் கன்ஃபார்ம்!
சென்னை: கமலின் விக்ரம் யூனிவர்ஸை விரிவுப்படுத்திய லோகேஷ் கனகராஜ் அதில் அண்ணன் சூர்யாவையும், தம்பி கார்த்தியையும் இணைத்துள்ளார்.
Recommended Video
கைதி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கைதி 2 உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விக்ரம் படத்தை பார்க்கவே கைதி படத்தை பார்த்துட்டு வாங்க என லோகேஷ் கனகராஜ் ட்வீட் போட்டது ஏன் என்பது விக்ரம் படத்தை பார்த்த அனைவருக்குமே புரிந்திருக்கும்.
இந்த லோகேஷ் கனகராஜின் யூனிவர்ஸில் புதிதாக ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் இணைந்துள்ள சூர்யா போட்ட ட்வீட்டுக்கு கமல் போட்ட பதில் ட்வீட் டிரெண்டாகி வருகிறது.

அண்ணாவா சித்தப்பாவா
நடிகர் சிவகுமாரை கமல் அண்ணன் என அழைத்து வந்த காலம் மாறி தற்போது சூர்யா கமலை அண்ணா என அழைத்து வருகிறார் என கமலே பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். சித்தப்பா என்று அழைக்கும் அளவுக்கு கமல் இல்லை என்பதால், மரியாதையுடன் அண்ணா என அழைத்து வரும் சூர்யா கமலுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்கிற தன்னுடைய நெடுநாள் கனவு விக்ரம் படத்தின் மூலம் நிறைவேறியதற்கு சற்று முன் ட்வீட் போட்டு நன்றி தெரிவித்து இருந்தார்.

சூர்யா தம்பி
சூர்யாவின் ட்வீட்டை பார்த்து ஹேப்பியான கமல் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் "டியர் சூர்யா தம்பி. இது எப்பவோ நிகழ்ந்திருக்க வேண்டும். உங்களை அதிகமாக நேசிக்கிறேன். தற்போது அதன் எல்லை மேலும், விரிவடைந்து இருக்கிறது. வாழ்த்துக்கள் தம்பி" என ட்வீட் போட்டுள்ளார்.

தம்பி சார்
அத்துடன் நிறுத்தி விடாமல் கடைசியாக "சாரி தம்பி சார்" என கமல் குறிப்பிட்டுள்ளார். ரோலக்ஸ் என தன்னை அழைக்கக்கூடாது என்றும் சார் போட்டு அழைக்க வேண்டும் என சூர்யா விக்ரம் படத்தில் பேசும் வசனத்தை குறிப்பிடும் விதமாக கமல் இப்படி ட்வீட் போட்டு விக்ரம் 3க்கான அடி போட்டுள்ளார்.

தளபதி அய்யா
விக்ரம் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சூர்யாவுடன் இணைந்து படம் பண்ணிட்டீங்க, அடுத்து தளபதி உடன் இணைந்து எப்போ படம் பண்ண போறீங்க என கமலிடம் கேட்டதற்கு, "தளபதி அய்யா கால்ஷீட் கொடுத்தா பண்ணிடலாம்" என கமல் பேசியதும் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இளைய நடிகர்களுக்கும் மூத்த நடிகர்கள் மரியாதை அளித்து பேசும்போது அந்த பண்பு வெளிப்படுகிறது.

ரசிகர்கள் உணர வேண்டும்
ஆனால், சமூக வலைதள சக்தியை கையில் கொண்டு சமீப காலமாக அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் தங்களுக்கு பிடிக்காத நடிகர்களை, தங்களுக்கு பிடித்த ஹீரோக்களின் போட்டியாளர்களை ஆபாசமாக சித்தரிப்பதும், அவதூறாக பேசுவதும் தவறு என்பதையும் மூத்த நடிகர்களே மரியாதையை எப்படி பேணுகின்றனர் என்பதை பார்த்து கற்றுக் கொண்டால் நலம் என்பதையும் உணர வேண்டும்.


Click it and Unblock the Notifications











