ஸாரி.. ராங் இன்ஃபர்மேஷன்.. அந்த படத்தில் நடிக்கவில்லை என அதிரடியாக மறுத்த சன்னி லியோன்!
மும்பை: ஆபாச பட நடிகையாக இருந்து பாலிவுட் நடிகையாக மாறிய சன்னி லியோன் பிரபல கன்னட படத்தில் நடிக்கவில்லை என மறுத்துள்ளார்.
பாலிவுட் படங்களில் உச்சகட்ட கவர்ச்சியில் நடித்து வரும் சன்னி லியோன் ஜெய்யின் வடகறி, மம்மூட்டியின் மதுர ராஜா உள்ளிட்ட தென்னிந்திய படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும், மலையாளத்தில் ஏகப்பட்ட படங்களிலும் கமீட் ஆகி உள்ளார் சன்னி லியோன்.

ஆபாச பட நடிகை
கரஞ்சித் கவுர் எனும் தனது பெயரை ஆபாச படங்களில் நடிப்பதற்காக சன்னி லியோன் என மாற்றிக் கொண்டார். நிர்வாணமாக ஏகப்பட்ட ஆபாச வீடியோக்களில் நடித்து வந்த சன்னி லியோன் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் பாலிவுட் கவர்ச்சி நடிகையாக மாறினார்.

தென்னிந்தியா பக்கம்
40 வயதான சன்னி லியோனுக்கு பாலிவுட்டில் மார்க்கெட் குறைந்த நிலையில், தென்னிந்தியா பக்கம் தனது கவனத்தை திருப்பி உள்ளார் சன்னி லியோன். ஜெய்யின் வடகறி, மம்மூட்டியின் மதுர ராஜா உள்ளிட்ட படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடிய சன்னி லியோன் மலையாளத்தில் சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்.

கோடிக்கணக்கில் சம்பளம்
ஒரே ஒரு குத்தாட்டம் ஆட நடிகை சன்னி லியோனுக்கு அந்த படத்தில் நடிக்கும் ஹீரோயின் அளவுக்கு கோடிக் கணக்கில் சம்பளம் கொடுத்து வருகின்றனர். சன்னிலியோன் பெயரை வைத்தே படத்தை வியாபாரம் செய்து விடலாம் என தயாரிப்பாளர்களும் தாராள மனதுடன் சன்னி லியோனை புக் செய்து வருகின்றனர்.

ராங் இன்ஃபர்மேஷன்
இந்நிலையில், கன்னட படமான காட்டன்பீட் திரைப்படத்தில் நடிகை சன்னி லியோன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட உள்ளார் என்கிற தகவல் வைரலானது. அந்த விஷயம் சன்னி லியோனுக்கு காதுக்கு எட்டிய நிலையில், அது முற்றிலும் தவறான செய்தி என்றும் அந்த படத்தில் தான் ஆட வில்லை என்றும் காட்டமாக பதில் அளித்துள்ளார்.

சம்பள பிரச்சனை
நடிகை சன்னி லியோன் கேட்ட ஒரு கோடி ரூபாய் சம்பளத்தை குறைத்துக் கொள்ள படக்குழுவினர் வைத்த கோரிக்கையின் காரணமாக அந்த படத்தில் இருந்து அவர் விலகி விட்டார் என்றும், அதனால் தான் இந்த செய்திக்கு இப்படியொரு அதிரடி ரியாக்ஷனை சன்னி லியோன் கொடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

புது வீடு
மும்பையில் நடிகர் அமிதாப் பச்சன் வாங்கி உள்ள சொகுசு ஏரியாவில் நடிகை சன்னி லியோனும் கடந்த ஆண்டு இறுதியில் புது அப்பார்ட்மென்ட்டை ரெஜிஸ்டர் செய்திருந்தார். இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பணிகள் முடிவடைந்த நிலையில், சமீபத்தில் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் புது வீட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கினார்.

ஷீரோ
கன்னட படமான காட்டன் பீட்டுக்கு கறாராக நோ சொல்லி உள்ள சன்னி லியோன், இயக்குநர் ஸ்ரீஜித் விஜயன் இயக்கத்தில் உருவாகி வரும் ஷிரோ படத்தின் ஷூட்டிங்கில் தற்போது இணைந்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இந்த சைக்கோ த்ரில்லர் படம் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











