Don't Miss!
- Finance
ஊழியர்கள் சம்பளத்தை இரட்டிப்பாக்கும் மைக்ரோசாப்ட்.. என்ன காரணம்?
- News
ப.சிதம்பரம் திகார் சிறைக்கு செல்ல வாய்ப்பு! கார்த்தி சிதம்பரத்திற்கு ஆபத்தில்லை..! ஹெச்.ராஜா அதிரடி!
- Sports
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பை
- Automobiles
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
- Technology
ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்
- Lifestyle
மேங்கோ கிரனிட்டா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வழுக்கைக்கெல்லாம் வருத்தப்படலாமா? - ’சொட்டை’ இயக்குநர் இசாக்!
சென்னை: பாலிவுட்டில் வெளியாகவுள்ள பாலா மற்றும் உஜ்தா சமான் ஆகிய இரு படங்களும் இளம் வழுக்கை குறித்த பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி உள்ளது.
இதே பிரச்சனையை மையமாக வைத்து தமிழில் தற்போது 'சொட்டை' என்ற தலைப்பில் ஒரு படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தை விரைவில் வெளியாகவுள்ள ஜெஸி படத்தை இயக்கியுள்ள முகமது இசாக் இயக்கி வருகிறார்.
எனக்கு
நடிப்பு
சொல்லிக்கொடுத்தவர்
செல்வராகவன்
தான்-
அசுரன்
தனுஷ்

வழுக்கை பிரச்சனை
பலருக்கு வாழ்க்கை பிரச்சனையை விட வழுக்கை பிரச்னை தான் அதிகமாக இருக்கிறது. அதிலும் இன்றைய இளம் தலைமுறையினருக்கு வரும் இளம் வழுக்கை பிரச்சனை இன்னும் கொடுமையான ஒன்று. இதனால், பல 90ஸ் கிட்ஸ்களுக்கு திருமணமும் நடைபெறாமல் தள்ளிப்போய் வருவது தான் இதில், வேதனையான விஷயம்.

பாலிவுட்டில் 2 படம்
இந்த இளம் வழுக்கை பிரச்சனையை மையமாக வைத்து பாலிவுட்டில் இரு படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன. பாலா என்ற தலைப்பில் ஒரு படமும், உஜ்தா சமான் என்ற தலைப்பில் ஒரு படமும் உருவாகி உள்ளது. இதில், வேடிக்கை என்ன வென்றால், இரு படங்களுக்கு இடையே கதை திருட்டு வழக்கும் ஓடிக் கொண்டிருப்பது தான்.

ஏற்கனவே
பாலிவுட்டில் கடந்த 2011ம் ஆண்டே ‘Hair is Falling' எனும் தலைப்பில் இந்த பிரச்சனை குறித்த படம் வெளியாகி கணிசமான வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில், கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் பாலிவுட்டில் இந்த படத்தின் கதையை தூசி தட்டி எடுத்து வருகின்றனர். காதல், பழிவாங்குதல் போல இளம் வழுக்கை பிரச்சனையை இன்னமும் பத்து ஆண்டுகள் கழித்து கூட எடுக்கலாம் தான்.

ரீமேக்
‘Hair is Falling' படத்தின் அதிகாரப்பூர்வ உரிமையை 2013ம் ஆண்டே இசாக் வாங்கியுள்ளார். ஆனால், நிதி நெருக்கடி காரணமாக இசாக்கால், அந்த படத்தின் ஷூட்டிங்கை தொடங்க முடியவில்லையாம். தற்போது, பாலிவுட்டில் மீண்டும் அந்த கதையின் தாக்கம் தலை தூக்கியுள்ளதால், தமிழில் வேறு யாராவது படம் பண்ணுவதற்குள் தானே இந்த படத்தை பண்ண வேண்டும் என்ற முயற்சியில் இசாக் இறங்கியுள்ளார்.

வருத்தப்பட தேவையில்லை
இளம் வயதில் ஏற்படக் கூடிய வழுக்கை குறித்து வருத்தப்பட தேவையில்லை என்ற ரீதியில் காமெடி கலந்து ‘சொட்டை' படத்தை இயக்கவுள்ளதாக இசாக் கூறியுள்ளார். நிச்சயம் தமிழ் ரசிகர்களிடையே இந்த படத்திற்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஹீரோ யார்?
இளம் வழுக்கை குறித்த படத்தில் நடிப்பது மிகவும் சவாலான ஒரு விஷயம். இந்த படத்தில் நடிக்க ஜெமினி ரைக்கர் என்ற அறிமுக நடிகர் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஏற்கனவே முகமது இசாக் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெஸி படத்தில் நாயகனாக நடித்துள்ளார். ஜெஸி படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.