Don't Miss!
- News கோவையில் மறுவாக்குப்பதிவு நடத்தணும்.. 1 லட்சம் வாக்குகளை காணோம்.. அண்ணாமலை பரபர புகார்!
- Automobiles 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
“சொட்ட” திரைப்படம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் ஒரு நல்ல படம்
சென்னை : ஒரே ஷாட்டில் 'அகடம்' என்ற திரைப்படத்தை எடுத்து கின்னஸ் உலக சாதனைப் படத்தை இயக்கினார் இசாக். இவர் நடிகர் 'நெடுஞ்சாலை' ஆரியை வைத்து 'நாகேஷ் திரையரங்கம்' திரைப்படத்தை இயக்கியிருந்தார். தற்பொழுது "சொட்ட" திரைப்படத்தை இயக்குகிறார்.
இப்படம் ஹிந்தியில் 'ஹேர் இஸ் பாலிங்' என்ற பெயரில் வெளிவந்த திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இளம் வயதிலேயே தலைமுடி உதிரும் இளைஞன் ஒருவன் தன் வாழ்வில் காதல், தொழில், திருமணம் என அனைத்திலும் அடுக்கடுக்காக தோல்வி அடைகிறான். மீண்டும் அதே இளைஞன் எப்படி தனது வழுக்கை தலையுடன் தன் காதல், தொழில், திருமணத்தில் வெற்றி பெறுகிறான் என்பதை நகைச்சுவையுடன் சொல்லும் கதை "சொட்ட".
இப்படத்தை மேன்டியோ பிலிம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் மூலம் ஜெமினி ரெய்கர் என்பவர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவருடன் பிரபல நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தில் இலங்கை தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜெ.ஷமீல் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு - மு. ரத்தீஷ்கண்ணா, எடிட்டர் - எஸ்.தேவராஜ், கலை இயக்குனர் - பூங்கா கிருஷ்ணமூர்த்தி, சண்டைப்பயிற்சி - E.கோட்டி, நடனம் - ஜானி, பாம்பே பாஸ்கர், நிர்வாக தயாரிப்பு - அபிலாஷ், மக்கள் தொடர்பு - வின்சன் C.M, பாடல்கள் - வேல்முருகன், அ.ப. ராசா, ஜெகன் சேட்