விஜய்யின் 'அந்த திறமை'யை பார்த்து வியக்கிறேன்: சவுந்தரராஜா

By Siva

சென்னை: விஜய் பற்றிய முக்கியமான விஷயத்தை தெரிவித்துள்ளார் நடிகர் சவுந்தரராஜா.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 63 படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடித்துள்ளார் சவுந்தரராஜா. தெறி படத்தை அடுத்து இந்த படத்திலும் விஜய்யுடன் சேர்ந்து நடித்ததில் மகிழ்ச்சியில் உள்ளார் அவர்.

விஜய் படத்தில் நடித்தது குறித்து சவுந்தரராஜா பேட்டி ஒன்றில் கூறியதாவது,

தளபதி 63

தளபதி 63

தளபதி 63 படத்தில் எனக்கு வெறும் 6 காட்சிகள் தான். படம் குறித்து எந்த தகவலையும் வெளியிடக் கூடாது என்று அட்லி தெரிவித்துள்ளார். அதனால் நான் இதற்கு மேல் எதுவும் கூற முடியாது. ஆனால் என் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது.

விஜய்

விஜய்

நான் ஏற்கனவே தெறி படத்தில் விஜய் சாருடன் சேர்ந்து நடித்துள்ளேன். அவருடன் சேர்ந்து நடிப்பதன் மூலம் நிறைய கற்றுக் கொள்கிறேன். அவர் தனது காட்சிகளை அவ்வளவாக ஒத்திகை பார்க்க மாட்டார்.

ஒரே டேக்

ஒரே டேக்

அன்றைய காட்சிகள் குறித்து அட்லி துணை நடிகர்களிடம் விளக்குவார். விஜய் சார் வந்தவுடன் அவர் என்ன செய்ய வேண்டும் என்று தெரிவிப்பார். விஜய் சார் பெரும்பாலும் ஒரே டேக்கில் நடித்துவிடுவார். அவரின் அந்த திறமையை பார்த்து வியக்கிறேன்.

நல்ல அனுபவம்

நல்ல அனுபவம்

விஜய் சார் இயக்குநர் சொல்வதை கேட்டு அப்படியே நடித்துவிடுவார். அவர் நடிப்பதை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் நடிப்பை பார்த்து நிறைய கற்றுக் கொண்டேன் என்கிறார் சவுந்தரராஜா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X