நின்றுபோன ராணாவை ரஜினியை வைத்து மீண்டும் எடுப்பேன்! - சவுந்தர்யா

By Shankar

சென்னை: ரஜினி நடிப்பதாக இருந்து, பின்னர் நின்றுபோன ராணா படத்தை மீண்டும் எடுக்கப் போவதாக அறிவித்துள்ளார் அவரது இளைய மகள் சவுந்தர்யா.

ரஜினி, தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகவிருந்த மெகா சரித்திரப் படம் ராணா. கே எஸே ரவிக்குமார் இயக்கத்தில் 2011ம் ஆண்டு பூஜை போட்ட அன்றே ரஜினிக்கு உடல்நிலை பாதிக்கப்பட, அந்தப் படம் நிறுத்தப்பட்டுவிட்டது.

ராணா

ராணா

இந்தப் படம் மீண்டும் வேறொரு கட்டத்தில் உருவாகும் என தயாரிப்பாளர்களும் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரும் கூறி வந்தனர். ரஜினியும் அதில் ஆர்வம் காட்டினாலும், கொஞ்ச காலம் போகட்டும் என்று கூறிவிட்டார்.

கோச்சடையான்

கோச்சடையான்

இந்த நேரத்தில்தான் ராணா கதையின் தொடர்ச்சியாக கோச்சடையான் படத்தை உருவாக்கினர். இதில் ரஜினியை மோஷன் கேப்சரிங் தொழில் நுட்பத்தில் படம் பிடித்துள்ளனர். மே மாதம் படம் வெளியாகும் என்று தெரிகிறது.

ரவிக்குமார் இயக்கத்தில் புது படம்

ரவிக்குமார் இயக்கத்தில் புது படம்

இதற்கிடையே கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஆக்ஷன் படம் ஒன்றின் அறிவிப்புக்காக அனைவரும் காத்திருக்கின்றனர்.

ஆனால் அதற்குள் ராணா படத்தை மீண்டும் தொடங்கப் போவதாக சவுந்தர்யா அறிவித்துள்ளார்.

சவுந்தர்யா

சவுந்தர்யா

இதுகுறித்து அவர் கூறுகையில், "சோச்சடையான் நல்ல கதை. எனவேதான் இதில் நடிப்பதற்கு எனது தந்தை ரஜினி ஒப்புக்கொண்டார். நவீன தொழில் நுட்பத்தில் இதை எடுத்துள்ளோம். ஹாலிவுட்டில்தான் இது போன்ற படங்கள் வருகின்றன. இது மாதிரி படங்கள் எடுப்பதற்கு ஆறு வருடங்கள் வரை ஆகும். ஆனால் நாங்கள் இரண்டரை ஆண்டுகளில் முடித்துள்ளோம்.

மீண்டும் ராணா

மீண்டும் ராணா

ராணா படத்தை துவங்கும் போது என் தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் படவேலைகள் முடங்கின. குணமடைந்த பிறகு அதில் நடிக்கும் அளவுக்கு ரஜினியின் உடல் நிலை ஒத்துழைக்காது என கருதி படப்பிடிப்பை கைவிட்டோம்.

புதிய தொழில்நுட்பம்

புதிய தொழில்நுட்பம்

ராணா கதை-திரைக்கதை-வசனம் தயாராக இருக்கிறது. அந்த படத்தை ரஜினியை வைத்து மீண்டும் எடுக்க விரும்புகிறோம். நவீன தொழில் நுட்பத்தில் ரஜினி அதிக உடல் உழைப்பை கொடுக்காத வகையில் இந்த படத்தை எடுப்போம்..", என்றார்.

அப்படின்னா திரும்பவும் மோஷன் கேப்சரிங்கா!!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X