கோச்சடையான் வெற்றியை விருந்தளித்துக் கொண்டாடிய சவுந்தர்யா, ஏஆர் ரஹ்மான்!
சென்னை: ரஜினியின் கோச்சடையான் படத்தின் வெற்றியை சென்னையில் விருந்தளித்துக் கொண்டாடினார் இயக்குநர் சவுந்தர்யா ரஜினி.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் நடிக்க, கேஎஸ் ரவிக்குமார் கதை, திரைக்கதை, வசனத்தில், சவுந்தர்யா இயக்கத்தில் உருவான படம் கோச்சடையான் -தி லெஜன்ட்.
6 மொழிகளில் உருவான இந்தப் படம் பெரும் பிரச்சினைகளைத் தாண்டி கடந்த மே 23-ம் தேதி உலகெங்கும் 4000க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியானது.

வெற்றி
இந்தியில் சரியாகப் போகாவிட்டாலும், தமிழ், தெலுங்கில் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக தமிழில் பிரமாண்ட ஓபனிங் கிடைத்தது இந்தப் படத்துக்கு. இன்னும் நூற்றுக்கும் அதிகமான அரங்குகளில் படம் ஓடிக் கொண்டுள்ளது தமிழகத்தில். சென்னை மற்றும் சுற்றுப் புறங்கலில் இன்றைக்கும் 60 அரங்குகளில் கோச்சடையான் ஓடிக் கொண்டிருப்பது, சமீப காலத்திய புது சாதனை என்கிறது கோடம்பாக்கம்.

பாக்ஸ் ஆபீஸ்
இந்த தேதிவரை படம் அனைத்து வழிகளிலும் ரூ 170 கோடியைத் தாண்டி வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸில் தெரிவித்துள்ளனர். பாக்ஸ் ஆபீஸ் டோடல் என்ற தளம், கோச்சடையான் 26 நாட்களில் 200 கோடிக்கும் மேல் வசூலித்ததாக் கூறுகிறது.

விரைவில் அறிக்கை
ஆனால் படத் தயாரிப்பாளர்கள் இதுபற்றி எதுவும் அறிக்கை வெளியிடவில்லை. இந்த வாரம் கோச்சடையானின் வசூல் பற்றி அதிகாரப்பூர்வ அறிக்கை தரவிருக்கிறது ஈராஸ் நிறுவனம். ரூ 125 கோடி செலவில் இந்தப் படம் உருவானது குறிப்பிடத்தக்கது.

விருந்து
படத்தின் இந்த வெற்றியை சென்னையில் விருந்தளித்துக் கொண்டாடினார். இந்த விருந்தில், படத்தின் இயக்குநர் சவுந்தர்யா ரஜினி, இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான், படத்தில் பணியாற்றிய இயக்குநர் ஆர் மாதேஷ், ரஹ்மானின் சகோதரி ஏஆர் ரெஹானா மற்றும் படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் பங்கேற்றனர்.
ஆக, ரஜினி தன் ரசிகர்களைச் சந்திப்பது உறுதியாகிவிட்டது!


Click it and Unblock the Notifications











