twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமல் படத்துக்கு உதவிய ரஜினி மகள்!

    By Shankar
    |

    கமல் நடித்துள்ள உத்தம வில்லன் படத்தின் விநியோக உரிமையை சவுந்தர்யா ரஜினிகாந்த் தலைமையில் இயங்கும் ஈராஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

    ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவராக ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா சமீபத்தில் பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற கையோடு பரபரவென பல படங்களை வாங்குவதில் மும்முரமாகியுள்ளார்.

    கத்தி

    கத்தி

    சமீபத்தில் இந்நிறுவனம் சார்பாக விஜய் நடித்துள்ள ‘கத்தி' படத்தின் ஆடியோ உரிமையை வாங்கி, வெளியிட்டார். எதிர்ப்புகளைப் பற்றியெல்லாம் கவலைப்படவே இல்லை.

    உத்தம வில்லன்

    உத்தம வில்லன்

    இந்நிலையில், கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘உத்தம வில்லன்' படத்தின் விநியோக உரிமையை ஈராஸ் நிறுவனம் சார்பாக வாங்கியுள்ளார். ‘உத்தமவில்லன்' படத்தில் கமலுடன் ஆண்ட்ரியா, பூஜாகுமார், சித்ரா லட்சுமணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார்.

    கமல் பிறந்த நாளில்

    கமல் பிறந்த நாளில்

    உத்தம வில்லன் படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. எப்படியாவது கமலின் பிறந்த நாளின் போது வெளியிட்டுவிட வேண்டும் என்ற வேகத்தில் தயாராகிவருகிறது படம்.

    ஆடியோ

    ஆடியோ

    லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும், கமலின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

    அக்டோபரில் ஆடியோ வெளியீட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

    English summary
    Eros South headed by Soundarya Rajinikanth has acquired the distribution rights of Kamal's Uthama Villain.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X