»   »  சௌந்தர்யா ரஜினி - அஸ்வின் முறைப்படி விவாகரத்து பெற்றனர்!

சௌந்தர்யா ரஜினி - அஸ்வின் முறைப்படி விவாகரத்து பெற்றனர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் ரஜினியின் இளையமகள் மகள் சௌந்தர்யா, அவர் கணவர் அஸ்வினிடமிருந்து இன்று முறைப்படி விவாகரத்து பெற்றார்.

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபர் மகன் அஸ்வினுக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

Soundarya Rajini gets divorce

ஆனால் முதல் குழந்தை பிறந்த கையோடு சௌந்தர்யாவுக்கும் அஸ்வினுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து தனது தந்தை வீட்டுக்கே திரும்பிவிட்ட சௌந்தர்யா, அஸ்வினைப் பிரிந்தே வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் சௌந்தர்யா விவாகரத்து வழக்கு தொடர்ந்தார்.

சௌந்தர்யா, அஸ்வின் இருவருமே நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கங்களை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இருவருக்கும் முறைப்படி விவாகரத்து வழங்கப்படுவதாக நீதிமன்றம் இன்று அறிவித்தது.

English summary
Director Soundarya Rajinikanth has formally got divorce from her husband Ashwin today.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil