சூப்பர் ஸ்டார் மகளுடன் கை கோர்த்த டூரிஸ்ட் ஃபேமிலி தயாரிப்பாளர்.. அதிகாரப்பூர்வமாகவே சொல்லிட்டாங்க!
சென்னை: இந்த ஆண்டு வெளிவந்த மிக குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு அதிக லாபத்தை ஈட்டிய படம் என்றால், அது சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி தான். படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் இயக்கி இருந்தார். படத்தில் சிம்ரன், ரமேஷ் திலக், பக்ஸ் பகவதி பெருமாள், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இந்நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான எம்.ஆர்.பி என்டர்டைமெண்ட் நிறுவனம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் தொடங்கியுள்ள சீயோன் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து புது படம் ஒன்றை தயாரிக்கவுள்ளனர்.
தயாரிப்பாளர் மகேஷ் ராஜின் எம்.ஆர்.பி என்டர்டைமெண்ட் நிறுவனம் இதற்கு முன்னர் குட் நைட், லவ்வர் மற்றும் டூரிஸ்ட் ஃபேமிலி என மொத்த மூன்று படங்களை தயாரித்துள்ளது. இந்த மூன்று படங்களுமே மில்லியன் டாலர் நிறுவனத்துடன் இந்த படங்களை தயாரித்துள்ளது. இப்படி இருக்கும்போது தற்போது மில்லியன் டாலர் நிறுவனத்துடன் இணைந்து படம் தயாரிக்காமல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சௌந்தர்யா ரஜினிகாந்தின் சீயோன் நிறுவனத்துடன் இணைந்து படம் ஒன்றை தயாரிக்க உள்ளார். இது தொடர்பான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராட்டு: ஏற்கனவே படத்திற்காக நடிகர்களை தேர்வு செய்கிறோம் என்று தெரிவித்திருந்தார்கள். அப்படி இருக்கையில், இன்று மாலை படக்குழு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை அறிவிக்கவுள்ளது என தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்பாக அறிவித்துள்ளனர். டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பார்த்த பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்ந் மற்றும் தயாரிப்பாளார் மகேஷ் ராஜ் ஆகியோரை அழைத்து பாராட்டினார். இது தொடர்பான புகைப்படங்களை படக்குழு வெளியிட்டிருந்தது. டூரிஸ்ட் ஃபேமிலி படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிப் படமாக உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது.
ஃபீல் குட் படங்கள்: மகேஷ் ராஜின் எம்.ஆர்.பி என்டர்டைமெண்ட் நிறுவனம் இதற்கு முன்னர் குட் நைட், லவ்வர் மற்றும் டூரிஸ்ட் ஃபேமிலி என மொத்தம் மூன்று படங்களும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிப் படமாக மாறியவை. இவர்களின் கதை தேர்வு என்பது முற்றிலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து, படத்தை எடுக்கிறார்கள். மேலும், மிகக் குறைந்த பட்ஜெட், திருப்தியான லாபம் என தமிழ் சினிமாவில் மிக நீண்ட ஆண்டுகளுக்குப் பின்னர் ஃபீல் குட் படங்களை அடுத்தடுத்து தயாரித்து வெற்றிகளைக் குவித்த தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு பின்னர் அந்த இடத்தை நிரப்ப தயாரிப்பு நிறுவனங்களே வரவில்லை.

ரஜினி மகளுடன்: அந்த வரிசையில் மகேஷ் ராஜின் எம்.ஆர்.பி என்டர்டைமெண்ட் நிறுவனம் மற்றும் மில்லியன் டாலர் நிறுவனத்தை அங்கீகரிக்கலாம் என்று கூறும் அளவுக்கு ஃபீல் குட் படங்களைக் கொடுத்து வருகிறார்கள். இன்று மாலை 4 மணிக்கு படக்குழு குறித்த அறிவிப்புகள் வெளியாக உள்ளது என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள். இந்த படத்தை டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை இயக்கிய அபிஷன் ஜீவிந்த் அல்லது ஆர்.ஜே. பாலாஜி இயக்க அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. மகேஷ் ராஜின் எம்.ஆர்.பி என்டர்டைமெண்ட் நிறுவனத்துடன் இணைந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் படம் தயாரிக்க கைகோர்த்துள்ளது தொடர்பான பேச்சு திரைத்துறையில் பரவலாக பேசப்படுகிறது.


Click it and Unblock the Notifications











