ஜெயித்தாலும்.. தோத்தாலும்.. சிஎஸ்கே லவ் மாறாது.. மோசமான பேட்டிங்.. தாங்கி பிடிக்கும் பிரபலங்கள்!
சென்னை: ஐபிஎல் என்றாலே மஞ்சள் ஜெர்ஸியின் மேஜிக்கையும், தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டையும் பார்க்கவே ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை காத்துக் கிடப்பார்கள்.
Recommended Video
கெடா மீசை எல்லாம் வைத்துக் கொண்டு சர்வதேச போட்டியில் இருந்து விலகிய பிறகு தோனியை பார்த்த போதே, ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
முதல் போட்டியிலேயே மும்பை அணியை வீழ்த்தி அபார வெற்றியும் பெற்றனர். ஆனால், இப்போ நிலைமையே வேற, இருந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இன்னமும் ஏகப்பட்ட பிரபலங்களும் ரசிகர்களும் விட்டுக் கொடுக்காமல் சப்போர்ட் செய்து வருகின்றனர்.

மோசமான பேட்டிங்
ஷேன் வாட்சனையும், கேதர் ஜாதவையும் ஒதுக்கி வைத்து விட்டு, ருதுராஜ், ஜகதீசன் என புதிய பேட்ஸ்மேன்களை இன்றைய போட்டியில் சென்னை அணி இறக்கியது. ஆனால், அந்த இருவரும் டக் அவுட் ஆகி வெளியேறியது ரசிகர்களை அதிருப்தி அடைய செய்தது. டூ பிளெஸ்ஸி ஒரு ரன்னிலும், அம்பதி ராயுது 2 ரன்னிலும், ஜடேஜா 7 ரன்னிலும், தோனி 16 ரன்னிலும் அடுத்து அடுத்து அவுட்டாகி ரசிகர்களை ஏமாற்றினர்.

சப்போர் பண்ண செளந்தர்யா
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்து அடுத்து விக்கெட்டுகளை இழந்த நிலையில், சமூக வலைதளம் முழுவதும் சென்னை அணிக்கு எதிரான விமர்சனங்களும் மீம்களும் பறந்தன. இந்நிலையில், தோற்றாலும் ஜெயித்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது உள்ள அன்பு எப்போதுமே மாறாது என தோனி வெற்றியுடன் ஸ்டம்பை எடுக்கும் போட்டோவை போட்டு சப்போர்ட் செய்துள்ளார்.

ஏற்றம் இறக்கம் இருக்கும்
எல்லாருக்குமே கெட்ட நாள், கெட்ட கேம், கெட்ட டோரனமெண்ட் இருக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மோசமாக விமர்சிப்பதை தவிர்த்து விட்டு சப்போர்ட் பண்ணுங்க, எத்தனை முறை சென்னை அணி வின் பண்ணியிருக்கு அதை நினைச்சி சந்தோஷப்படுங்க என நடிகர் விஷ்ணு விஷால் சிஎஸ்கேவுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.

சிஎஸ்கேவை விட்டுக் கொடுக்க மாட்டோம்
உனக்காகத் தான் ஐபிஎல் பார்க்க ஆரம்பிச்சோம், நீ ஜெயிச்சு கொடுத்த வெற்றியில் நாங்க சந்தோஷப்பட்டோம், நீ சிரிக்கும் போது நாங்களே வின் பண்ணியது போல கொண்டாடி சிரிச்சோம், உன் மேல நம்பிக்கை இருக்கு, நீ கஷ்டப்படும் போது கண்ணீர் வருது, ஆனால் எப்போதும் உன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன் என தோனியின் படங்களை போட்டு, சிஎஸ்கேவை விட்டுக் கொடுக்க மாட்டோம் என ரசிகர்களும் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











