காதல் கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை கோர்ட்டில் சவுந்தர்யா ரஜினிகாந்த் மனு
சென்னை: கணவர் அஸ்வின் ராம்குமாரிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தரக் கோரி சவுந்தர்யா ரஜினிகாந்த் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் அஸ்வின் ராம்குமாரை காதலித்து கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

அவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளார். வேத் கடந்த ஆண்டு மே மாதம் 6ம் தேதி பிறந்தார். கருத்து வேறுபாடு காரணமாக சவுந்தர்யா தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
அவர்களை சேர்த்து வைக்க ரஜினி பெரிதும் முயன்றும் ஒன்றும் நடக்கவில்லை. அஸ்வின் சவுந்தர்யாவுடன் சேர்ந்து வாழ தயாராக இருப்பதாகவும் அவர் தான் அடம்பிடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தரக் கோரி சவுந்தர்யா சென்னை குடும்ப நல முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











