ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தோளில் கைபோட்ட செளந்தர்யா ரஜினிகாந்த் கணவர்.. குவியும் கமெண்ட்ஸ்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குடும்பத்துடன் ஹோலி கொண்டாடிய புகைப்படங்களை அவரது மகள்களான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் செளந்தர்யா ரஜினிகாந்த் சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளனர்.
இதே போன்ற ஒரு ஹோலி பண்டிகை தினத்தில் தான் ரஜினிகாந்த் எனும் பெயரை இயக்குநர் கே. பாலசந்தர் சிவாஜி ராவ் கெய்க்வாட்டுக்கு மாற்றினார் என்றும் இந்த நாள் ரஜினிகாந்த் டே என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்துக்கே ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்டுகள் குவிந்து வரும் நிலையில், செளந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட ஹோலி கொண்டாட்ட புகைப்படத்துக்கு படுமோசமான கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
தனுஷுடன் விவாகரத்து: நடிகர் தனுஷை காதலித்து வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2004ம் ஆண்டு அவரை திருமணம் செய்துக் கொண்டார். லிங்கா மற்றும் யாத்ரா என இரு மகன்கள் இந்த தம்பதியினருக்கு உள்ளனர். கணவர் தனுஷை வைத்து '3' படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அதன் பின்னர் கெளதம் கார்த்தியை வைத்து 'வை ராஜா வை' படத்தை இயக்கினார். அந்த படத்திலும் தனுஷ் கேமியோ ரோலில் கொக்கி குமார் கெட்டப்பில் கிளைமேக்ஸில் வந்திருப்பார். அதன் பின்னர் படங்கள் ஏதும் இயக்காமல் இருந்து வந்த ஐஸ்வர்யா கருத்து வேறுபாடு காரணமாக தனுஷை 17 வருடங்கள் கழித்து 2022ம் ஆண்டு பிரிவதாக அறிவித்தார். நடிகர் தனுஷும் அதே அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.
இரண்டாம் திருமணம் நடக்கவில்லை: நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் இதுவரை இரண்டாம் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் ராம்குமார் என்பவரை திருமணம் செய்து பிரிந்த நிலையில், விசாகன் என்பவரை திருமணம் செய்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார். ஆனால், ஐஸ்வர்யா இன்னமும் அடுத்த திருமணத்துக்கு ரெடியாகவில்லை. அதற்கு பதிலாக தனக்கு ரொம்பவே பிடித்த இயக்கத்தில் ஆர்வம் செலுத்தி அப்பா ரஜினிகாந்தை மொய்தீன் பாயாக நடிக்க வைத்து லால் சலாம் படத்தை கடந்த மாதம் ரிலீஸ் செய்தார்.
ஹாட்ரிக் தோல்வி: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய '3', வை ராஜ வை படங்களை தொடர்ந்து பல வருடங்கள் கழித்து அவர் இயக்கிய லால் சலாம் படமும் படுதோல்வியை சந்தித்தது. விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், தம்பி ராமைய்யா உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தில் ரஜினிகாந்த் எக்ஸ்டன்டட் கேமியோவாக நடித்திருந்தார். ஹார்ட் டிஸ்க் தொலைந்து விட்டது என்றும் சூப்பர் ஸ்டார் இந்த படத்தில் நடித்திருக்கக் கூடாது என்றும் படத்தின் தோல்விக்கு காரணங்களாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுக்கியது ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
ஐஸ்வர்யா தோளில் கை: செளந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட ஹோலி கொண்டாட்ட புகைப்படத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தோள் மீது விசாகன் கை வைத்து இருந்ததை பார்த்த ரசிகர்கள் கண்டபடி கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். தனுஷ் அண்ணா இந்த குடும்பத்தில் இருந்திருக்க வேண்டும் என்றும் அது உங்க மனைவி இல்லை ஆள் மாறிடுச்சு என்றும், ஒரு செகண்ட் தலையே சுத்திடுச்சு, இதுல யாரு ஐஸ்வர்யா, யாரு செளந்தர்யா என விதவிதமான கமெண்ட்டுகளை போட்டு கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











