இதயம் நொறுங்கிவிட்டது: சவுந்தர்யா ரஜினிகாந்த் வேதனை
சென்னை: நெட்டிசன்கள் தன்னை கழுவிக் கழுவி ஊத்தியதை பார்த்த சவுந்தர்யா ரஜினிகாந்த் புதிதாக ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
விசாகனை மறுமணம் செய்துள்ள சவுந்தர்யா ரஜினிகாந்த் தேனிலவுக்காக ஐஸ்லாந்துக்கு சென்றுள்ளார். தேனிலவின்போது எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்ட அவரை நெட்டிசன்கள் விளாசினார்கள்.
புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்த நிலையில் இப்படியா புகைப்படம் வெளியிடுவது என்று சவுந்தர்யாவை திட்டினார்கள்.
சவுந்தர்யா
நெட்டிசன்கள் தன்னை விளாசியதை பார்த்த சவுந்தர்யா வீரமரணம் அடைந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்ட பெட்டிகளின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு இதயம் நொறுங்கிவிட்டதாக கூறியுள்ளார்.
ரஜினி
சவுந்தர்யாவின் ட்வீட்டை பார்த்துவிட்டு போர் வந்தாச்சு உங்க அப்பாவை வரச் சொல்லுங்கள் என்கிறார்கள்.
நம்பிட்டோம்
வீரர்களின் வீரமரணம் குறித்து அறிந்து இதயம் நொறுங்கிவிட்டது என்று சவுந்தர்யா போட்ட ட்வீட்டை பார்த்துவிட்டு நம்பிட்டோம் என்கிறார்கள் நெட்டிசன்கள்.
சோகம்
வீரர்கள் வீரமரணம் அடைந்த நிலையில் உங்களின் தேனிலவு புகைப்படங்களை அடுத்த 2 நாட்களுக்கு வெளியிடாதீர்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார் ஒருவர்.


Click it and Unblock the Notifications











