ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் சௌந்தர்யா ரஜினிகாந்த் !
சென்னை : சௌந்தர்யா ரஜினிகாந்த், தான் புதிதாக தொடங்கியிருக்கும் 'Hoote' செயலி குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் கூறி, வாழ்த்துகளை பெற்றுள்ளார்.
Recommended Video
அந்த புகைப்படத்தை சௌந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் Hoot செயலி பிரபலமடைய ஸ்டாலின் வாழ்த்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

Hoote App
சௌந்தர்யா ரஜினிகாந்த் hoote எனும் புதிய செயலியை உருவாக்கி உள்ளார். இந்த செயலியை ரஜினிகாந்த் தனது வாழ்த்து குரல் பதிவின் மூலம், தொடங்கி வைத்தார். எழுத படிக்க தெரியாதவர்கள் இந்த செயலி வாயிலாக மற்றவர்களுக்கு தாங்கள் சொல்ல வரும் கருத்துக்களை எளிதாக சொல்ல முடியும் என்று நடிகர் ரஜினிகாந்த் குரல் பதிவில் தெரிவித்து இருந்தார்.

தந்தை தான் காரணம்
இந்த செயலி உருவாக காரணமாக இருந்தது எனது தந்தை தான் என்றும், எனது தந்தைக்கு தமிழில் அதிகம் எழுத தெரியாது எனவே, ஒரு முறை குரல் வழியாக செய்தி அனுப்பியதே இந்த செயலியை உருவாக்க காரணமாக இருந்தது என்றும் சவுந்தர்யா கூறியிருந்தார்.

15 மொழிகளில்
தமிழ், ஹிந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட 15 இந்திய மொழிகளிலும், 10 சர்வதேச மொழிகளில 'ஹுட்' வெளியிடப்பட்டுள்ளது. இந்த தளம் அனைவருக்குமானது என்ற அடிப்படையில் சமஸ்கிருத மொழியும் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். வரும் காலத்தில் இன்ஸ்டாகிராம், ட்விட்டர், ஃபேஸ்புக் போல இந்த செயலியும் பிரபலமடையும் என்றார்.

ஸ்டாலினிடம் வாழ்த்து
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினை இன்று சந்தித்த சௌந்தர்யா ரஜினிகாந்த், 'Hoote' செயலி குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் கூறி, வாழ்த்து பெற்றுள்ளார். மேலும் ஸ்டாலினுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சௌந்தர்யா, Hoot செயலி பிரபலமடைய ஸ்டாலின் வாழ்த்தியதாகவும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











