அண்ணாத்த டைரக்டர் சிவாவிடம் கோரிக்கை வைத்த சௌந்தர்யா... என்னன்னு தெரியுமா?
சென்னை : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி தீபாவளிக்கு ரிலீசாகவுள்ள படம் அண்ணாத்த.
இந்தப் படத்தை இயக்கியுள்ளார் சிறுத்தை சிவா. மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளத்தையே படத்தில் பயன்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் படத்தை பார்த்த ரஜினிகாந்த் மகள், டைரக்டர் சிவாவிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, குஷ்பூ, மீனா மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் அண்ணாத்த. படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. சூப்பர்ஸ்டார் கதைகளுக்கே உரித்தான கமர்ஷியல் அம்சங்களுடன் படத்தை எடுத்துள்ளார் இயக்குநர் சிறுத்தை சிவா.

கமர்ஷியல் அம்சங்கள்
படையப்பா, முத்து போன்ற படங்களின் வரிசையில் நீண்ட நாட்களுக்கு பிறகு சூப்பர்ஸ்டாருக்கு ஏற்றாற்போல கமர்ஷியல் அம்சங்களுடன் படம் எடுக்கப்பட்டுள்ளது படத்தின் டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவற்றின் மூலம் அறிய முடிகிறது. இதுவரை படத்தின் நான்கு பாடல்களை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்.
Recommended Video

சிறப்பான ப்ரமோஷன்
படத்தை சிறப்பான வகையில் ப்ரமோட் செய்து வருகிறது சன் பிக்சர்ஸ். சூப்பர்ஸ்டார் படங்களுக்கு ப்ரமோஷன் அதிகமாக தேவையில்லை என்ற போதிலும் இந்தப் படம் மிகவும் சிறப்பான வகையில் ப்ரமோட் செய்யப்பட்டு வருகிறது. முதலில் ரிலீசான அண்ணாத்த பாடல் எஸ்பிபி இறுதியாக ரஜினிக்காக குரல் கொடுத்த பாடலாக அமைந்துள்ளது.

சிறப்பான விமர்சனம்
இதுவரை படத்தை பார்த்த அனைத்து விஐபிக்களும் சிறப்பான விமர்சனங்களை அளித்து வருகின்றனர். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய பேரப் பிள்ளைகளுடன் படத்தை சூப்பர்ஸ்டார் பார்த்துள்ளார். இதனிடையே அவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அண்ணாத்தயுடன் தித்திக்கும் தீபாவளி
படம் ரிலீசுக்கு முன்னதாகவே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தித்திக்கும் தீபாவளியை அண்ணாத்த படத்துடன் கொண்டாட ரசிகர்களும் தயாராகி வருகின்றனர். டிக்கெட் புக்கிங் துவங்கியுள்ள நிலையில், அனைத்து திரையரங்குகளிலும் புக்கிங் சிறப்பாக உள்ளது.

சிவா செய்த மேஜிக்
இந்நிலையில் படத்தை பார்த்த ரஜினியின் மகள் சவுந்தர்யா, படத்தில் சிவா மேஜிக் செய்துள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார். படத்தை பார்த்துவிட்டு கண்ணீருடன் சிவாவின் கைகளை பிடித்து தான் நன்றி கூறியதாகவும் அவர் கூறியுள்ளார். தலைவரின் வெறித்தனமான ரசிகை மற்றும் அவருடைய மகள் என்ற முறையில் மீண்டும் சிவா மற்றும் தனது அப்பா இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற விருப்பத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். இதனை சன்நியூஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











