எல்லோரும் கிண்டல் செய்றாங்க.. தனுஷ் மகனுக்கு தயக்கம் வந்துவிட்டது.. ரஜினி மகள் ஓபன் டாக்
சென்னை: நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். நல்லபடியாக போய்க்கொண்டிருந்த திருமண வாழ்க்கையில் அவர்கள் விவாகரத்து பெற்றுவிட்டார்கள். இரண்டு மகன்களையும் கோ பேரண்ட்டிங் முறையில் வளர்க்கிறார்கள். இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனுஷின் மகன் லிங்கா பற்றி பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
காதல் கொண்டேன் திரைப்படத்தின் சமயத்தில் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவுடன் தனுஷுக்கு ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறி; பிறகு திருமணத்தில் முடிந்தது. திருமணத்துக்கு பிறகு இரண்டு பேரும் நன்றாகத்தான் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். ஆனால் திடீரென அவர்களுக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் நாளடைவில் பெரிதாகி சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்துகொண்டார்கள். இப்போது இரண்டு பேருமே சிங்கிளாக இருக்கிறார்கள்.
மகன்கள்: அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தாங்கள் பிரிந்துவிட்டாலும் தங்களது மகன்கள் மீது தனுஷும், ஐஸ்வர்யாவும் கொள்ளை பிரியம் வைத்திருக்கிறார்கள். தங்களுடைய பிரிவுக்கு பிறகு மூத்த மகன் யாத்ராவின் பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றாக கலந்துகொண்டார்கள்.யாத்ராவையும், லிங்காவையும் அவர்கள் கோ பேரண்ட்டிங் முறையில் வளர்க்க முடிவெடுத்து அதன்படியே செயல்பட்டுவருகிறார்கள்.

ஹீரோவாக அறிமுகமாகும் யாத்ரா?: இது ஒருபக்கம் இருக்க கடந்த சில நாட்களாக தகவல் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது தனுஷ் தனது மூத்த மகன் யாத்ராவை ஹீரோவாக களமிறக்கப்போகிறார் என்பதுதான் அது. ஏற்கனவே நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் வந்த கோல்டன் ஸ்பேரோ பாடலில் சில வரிகளை யாத்ரா எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது அவரும் ஹீரோவாக சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும்; விரைவில் அறிவிப்பு வருமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது மகன் லிங்கா: இரண்டாவது மகன் லிங்கா இதுவரை திரைத்துறைக்குள் வராவிட்டாலும்; படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாவிலேயே ஃபேமஸாகிவிட்டார். ரஜினி, தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோரின் படங்களுடைய இசை வெளியீட்டு விழா வந்துவிட்டால் உடனே தனது மொபைலை எடுத்து வீடியோ எடுக்க ஆரம்பித்துவிடுவார். அது ஆரம்பத்தில் யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை. ஒருகட்டத்தில் அதை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை பறக்கவிட்டார்கள். தனுஷேகூட ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில், 'என்ன லிங்கா நம்மள வீடியோ எடுக்கல' என கேட்டது குறிப்பிடத்தக்கது.
சௌந்தர்யா பேட்டி: இந்நிலையில் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் லிங்கா பற்றி பேசுகையில், "லிங்கா இப்போது ரொம்பவே பிரபலமாகிவிட்டான். எங்கே சென்றாலும் அவனை பற்றித்தான் எல்லோரும் கேட்கிறார்கள். அதேசமயம் அவன் வீடியோ எடுப்பதை இப்போது நிறுத்திவிட்டான். எல்லோரும் கிண்டல் செய்வதால் அவனுக்குள் ஒரு தயக்கம் வந்துவிட்டதோ என தோன்றுகிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











