போயஸ் கார்டனில் ஆண்களின் ஆதிக்கம்தான் இருக்கு.. ரஜினியின் இளைய மகள் ஓபன் டாக்
சென்னை: ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யா வித் லவ் படத்தை தயாரித்தார். அதில் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாகவும், அனஸ்வரா ஹீரோயினாகவும் நடித்திருந்தார்கள். கடந்த வாரத்தில் வெளியான படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சௌந்தர்யா கொடுத்திருக்கும் பேட்டி சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியிருக்கிறது.
ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா 3, வை ராஜா வை, லால் சலாம் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். ஆனால் அந்த மூன்று படங்களுமே பெரிய வரவேற்பை பெறவில்லை. அதேசமயம் ஒரு இயக்குநராக திரைத்துறையில் அவர் முத்திரை பதித்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக தனுஷுடனான பிரிவுக்கு பிறகு தனது கரியரில் மேற்கொண்டு கவனம் செலுத்த ஆரம்பித்திருப்பதாகவும் தகவல்கள் வர ஆரம்பித்திருக்கின்றன.
இளைய மகள் சௌந்தர்யா: இளைய மகள் சௌந்தர்யாவை பொறுத்தவரை அன்பே ஆருயிரே, சந்திரமுகி உள்ளிட்ட படங்களுக்கு எல்லாம் டைட்டில் டிசைன் செய்தார். அதனையடுத்து கோவா படத்தை தயாரித்தார். அது கைகொடுக்கவிலலி. அதைத் தொடர்ந்து மோசன் கேப்சர் தொழில்நுட்பத்தில் கோச்சடையான் படத்தை இயக்கினார். அதுவும் தோல்வியை சந்தித்தது. அந்தப் படத்துக்கு பிறகு விஐபி 2 படத்தை இயக்கினார். அதுவும் தோல்விதான் அடைந்தது.

வித் லவ் சௌந்தர்யா: இப்படிப்பட்ட சூழலில்தான் வித் லவ் படத்தை தயாரித்தார். இதனை மதன் என்ற புதுமுகம் இயக்கினார். டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக அறிமுகமானார். மலையாள நடிகை அனஸ்வரா ஹீரோயினாக நடித்திருந்தார். கடந்த வாரத்தில் படமானது ரிலீஸானது. படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. காதல் ஜானரில் உருவான அப்படம் பல நாஸ்டால்ஜியா நினைவுகளை கிளறிவிட்டு சென்றது.
வசூலிலும் சூப்பர்: விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற அப்படம் வசூலிலும் சக்கைப்போடு போட்டது. இதுவரை 20 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை அள்ளியிருப்பதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வெற்றி சௌந்தர்யாவுக்கு பெரிய உற்சாகத்தை கொடுத்திருப்பதாகவே தெரிகிறது. இதே ஃபார்மோடு அடுத்தடுத்து படங்களை தயாரிப்பதற்கு கதைகளை கேட்க ஆரம்பித்திருப்பதாகவும்; விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் தெரிகிறது.
ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் சௌந்தர்யா கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் கொடுத்த பேட்டியில், "யாத்ரா, லிங்கா, வேத், வீர் ஆகிய நான்கு பேருமே எனக்கு பாப்பாதான். நானும், அக்காவும் வளர்ந்தபோது பெண்களின் ஆதிக்கம் போயஸ் கார்டனில் இருந்தது. இப்போது நான்கு பேருமே ஆண்கள்தான். அவர்களது ஆதிக்கம்தான் இருக்கிறது. நான்கு பேருமே வெவ்வேறு வயதில் இருக்கிறார்கள். எனவே அப்பாவுக்கும், அம்மாவுக்கும் அவர்களுடன் உரையாடுவது மகிழ்ச்சியாகவே இருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











