டால்பினுக்கு முத்தம் கொடுத்த சூப்பர்ஸ்டார் பொண்ணு... வைரலாகும் புகைப்படம்
சென்னை : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 70 வயதை கடந்தும் சிறப்பா படங்களில் நடித்து வருகிறார்.
இவரது மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யா இருவரும் சமூக வலைதளங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
சூப்பர்ஸ்டார், தலைவர் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது 71வது பிறந்தநாளை கொண்டாடினார். 70 வயதை கடந்த நிலையிலும் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அண்ணாத்த படம் நல்ல வசூலை பெற்றுள்ளது.

பிசியான சவுந்தர்யா ரஜினிகாந்த்
இவரது மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யா இருவரும் படங்களை இயக்குவது, தயாரிப்பது என பிசியாக காணப்படுகின்றனர். சமூக வலைதளங்களிலும் இவர்களை காண முடிகிறது. குறிப்பாக சவுந்தர்யா ரஜினிகாந்த் ட்விட்டர் உள்ளிட்ட தளங்களில் பிசியாக காணப்படுகிறார்.

சமூகவலைதளங்களில் பிசி
அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் தனது தந்தை குறித்த செய்திகளை பகிர்ந்து வருகிறார். தன்னுடைய குடும்பத்தினரின் கொண்டாட்டங்களையும் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் தனது அக்காவுடன் இணைந்து கிறிஸ்துமஸ் வாழ்த்தையும் தனது குடும்பத்தினருடன் இணைந்து பகிர்ந்தார்.

சிறப்பான ஹுட் ஆப்
இவர் ஹுட் என்ற குரல் பதிவு ஆப்பையும் அறிமுகம் செய்து தனது தந்தையின் குரலை முதல்முறையாக அதில் பதிவிட்டு வெளியிட்டார். தொடர்ந்து பிரபலங்கள் பலரும் இதில் தங்களை இணைத்து கொண்டு வருகின்றனர். இதை வெற்றிகரமாக கொண்டு செல்கிறார்.

தயாரிப்பில் கவனம்
மேலும் இவர் தனது தந்தையை வைத்து ஒரு படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்தப் படத்தை அண்ணாத்த படத்தை இயக்கிய சிவா இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவரது முதல் திருமணம் தோல்வியடைந்ததையடுத்து இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

டால்பினுக்கு முத்தம்
சமூக வலைதளங்களில் சிறப்பாக செயல்பட்டுவரும் சவுந்தர்யா ரஜினிகாந்த் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் டால்பினுக்கு முத்தம் கொடுக்கும் புதிய புகைப்படத்தை இணைத்துள்ளார். தன்னுடைய புதிய ப்ரொபைல் பிக்சர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











