ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் புதிய முயற்சி.. சகோதரி செளந்தர்யா எப்படி வாழ்த்திருக்காரு பாருங்க!

சென்னை: மகளிர் தினத்தை முன்னிட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி உள்ள 'பயணி' எனும் ஆல்பம் வீடியோவின் 25 நொடி டீசர் வெளியாகி உள்ளது.

அதை என்ஜாய் கூட பண்ண முடியாமல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை ஷேர் செய்து தனது சகோதரி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை செளந்தர்யா ரஜினிகாந்த் வாழ்த்தி உள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில்

தனுஷை வைத்து 3 எனும் காதல் திரைப்படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களை அள்ளினார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். கெளதம் கார்த்திக் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய வை ராஜா வை திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதன் பிறகு புதிய படங்களை இயக்காமல் இருந்து வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் இயக்கத்தில் முழுமூச்சாக இறங்கி உள்ளார்.

விவாகரத்து பிரச்சனை

விவாகரத்து பிரச்சனை

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஆர்வம் செலுத்தியது தான் அவருக்கும் தனுசுக்கும் இடையே ஏற்பட்ட விவாகரத்து பிரச்சனைக்கே காரணம் என தகவல்கள் வெளியாகின. அதனை உறுதி செய்யும் வகையில், கணவர் தனுஷை பிரிந்த நிலையில் ஹைதராபாத்தில் ஆல்பம் சூட்டிங்கில் பிசியாகி உள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

பயணி

பயணி

முஸாபிர் என்றும் தமிழில் பயணி என்றும் உருவாகி உள்ள அந்த ஆல்பத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் 3 படத்தில் கொலவெறி பாடல் போட்டு அறிமுகமான அனிருத் மீண்டும் அவருடன் இணைந்து இந்த பயணி ஆல்பத்தை உருவாக்கி இருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

செளந்தர்யா வாழ்த்து

செளந்தர்யா வாழ்த்து

இந்நிலையில், அந்த ஆல்பத்தின் 25 நொடி டீசர் வீடியோவை மகளிர் தினத்தை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்த செளந்தர்யா ரஜினிகாந்த், தனது சகோதரியின் பாடல் சீக்கிரமே வெளியாகி வெற்றிப்பெற வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். செளந்தர்யாவின் ட்வீட்டை தொடர்ந்து ஏகப்பட்ட ரசிகர்களும் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

5 லட்சம் ரசிகர்கள்

5 லட்சம் ரசிகர்கள்

இன்ஸ்டாகிராமில் இதுவரை 239 போஸ்ட்டுகளை போட்டுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்னமும் ஐஸ்வர்யா தனுஷ் என்றே பெயரை மாற்றாமல் உள்ளார். தனக்கு 5 லட்சம் ஃபாலோயர்கள் வந்து விட்டனர் என்பதை அறிந்த கொண்ட அவர், மருத்துவமனையில், இருந்த நிலையிலே ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ள வீடியோவும் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X