செளந்தர்யா ரஜினிகாந்த் மகனுக்கு காதணி விழா.. பேரனை பார்க்க விமானத்தில் பறந்த சூப்பர்ஸ்டார்!

சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் தொழிலதிபர் விசாகனை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில், தனது குழந்தைக்கு காது குத்தும் விழாவை இன்று சூலூரில் பிரம்மாண்டமாக நடத்தி உள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து கோவைக்கு அந்த விழாவுக்காக நடிகர் ரஜினிகாந்த் புறப்பட்டுச் சென்ற நிலையில், தான் தலைவர் 171 படம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ரஜினி பதில் அளித்திருந்தார். பேரனுக்கு காது குத்தும் விழாவுக்கு ரஜினி சென்றுள்ள நிலையில், அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி தீயாய் பரவி வருகின்றன.

Soundarya Rajinikanth son ear piercing function held today

ரஜினிகாந்த் பேரன்கள்: நடிகர் ரஜினிகாந்துக்கு ஆண் குழந்தைகள் பிறக்காத நிலையில், ஐஸ்வர்யா மற்றும் செளந்தர்யா என இரு பெண் குழந்தைகள் பிறந்து இருவரும் சினிமாவில் இயக்குநர்களாக உயர்ந்துள்ளனர். இந்நிலையில், ஐஸ்வர்யாவுக்கும் ஆண் குழந்தைகள் யாத்ரா மற்றும் லிங்கா உள்ள நிலையில், கடந்த ஆண்டு செளந்தர்யாவுக்கும் ஆண் குழந்தை பிறந்து அதற்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என பெயர் வைத்திருந்தனர்.

Soundarya Rajinikanth son ear piercing function held today

குழந்தைக்கு காது குத்து: விசாகனை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்ட செளந்தர்யா ரஜினிகாந்துக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், அந்த குழந்தைக்கு காது குத்தும் நிகழ்ச்சி இன்று சூலூரில் தடபுடலாக நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சிக்காக சென்னையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் விமானம் மூலம் கோவைக்கு பறந்து சென்றுள்ளார். அதற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்திப்பதையும் ரஜினி ஒத்தி வைத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Soundarya Rajinikanth son ear piercing function held today

குட்டி ரஜினி: தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு பிறந்த குழந்தைகளுக்கும் ரஜினிகாந்துக்கு பிடித்ததை போல யாத்ரா மற்றும் லிங்கா என்கிற பெயர்களே சூட்டப்பட்டிருந்தன.

இந்நிலையில், தாத்தாவின் பெயரை தனது மகனுக்கு சூட்ட வேண்டும் என நினைத்த செளந்தர்யா ரஜினிகாந்த் வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என்கிற பெயரையே தனது மகனுக்கு சூட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஜினிகாந்த் வீட்டில் ஒரு குட்டி ரஜினி வந்து விட்டாரா என ரசிகர்கள் அந்த குழந்தையை வாழ்த்தி வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து லால் சலாம் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், விரைவில் தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பில் இணையப் போகிறார். அதன் பின்னர், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தலைவர் 171 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X