அதே ரத்தம் அப்டித்தான் இருக்கும்.. சத்தமில்லாமல் லிட்டில் சூப்பர்ஸ்டார் பட்டம் வாங்கிய ரஜினி பேரன்
சவுந்தர்யாவின் மகன் வேத்தை, லிட்டில் சூப்பர்ஸ்டார் என ரஜினி ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Recommended Video
சென்னை: அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என ஆளாளுக்கு அடித்துக் கொண்டிருக்க, சத்தமில்லாமல் 'லிட்டில் சூப்பர்ஸ்டார்' பட்டத்தை ரசிகர்களிடமிருந்து பெற்றுள்ளார் ரஜினியின் பேரன்.
ரஜினியின் இளைய மகளான சவுந்தர்யா, தனது மகன் வேத்தின் புதிய புகைப்படமொன்றை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ரஜினியைப் போன்றே கால் மீது கால் போட்டு ஸ்டைலாக அமர்ந்திருக்கிறார் வேத்.
அந்தப் புகைப்படத்திற்கு, 'ஸ்டைல் அவன் ரத்தத்துலயே இருக்கு.. அதே ரத்தம் அப்படித்தான் இருக்கும்' என கமெண்ட்டும் வெளியிட்டுள்ளார் சவுந்தர்யா.

ஸ்டைலோ ஸ்டைல்:
ஸ்டைலுக்கு பேர் போனவர் ரஜினி. அவரது ஒவ்வொரு அசைவுமே ஸ்டைலோ ஸ்டைல் தான். அதனால் தான் பாட்ஷா படத்தில் ஸ்டைலு ஸ்டைலு தான் நீ சூப்பர் ஸ்டைலு தான் என்ற பாடலே வைக்கப்பட்டது. வயதான போதும்கூட அவரது ஸ்டைலும், அழகும் இன்னும் குறையவில்லை என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.
வீட்டுக்குள்ளேயே போட்டி:
இந்நிலையில், ரஜினியின் ஸ்டைலுக்கு அவரது வீட்டிலேயே போட்டி உருவாகிறதோ என்ற சந்தேகம் வருகிறது அவரது பேரன்களைப் பார்க்கும் போது. அந்தளவிற்கு தாத்தாவிற்கு சற்றும் சளைக்காமல் ஸ்டைலாக வலம் வருகின்றனர் அவரது மூன்று பேரன்களும்.

மூன்று பேரன்கள்:
ஏற்கனவே சவுந்தர்யாவின் இரண்டாவது திருமணத்தின் போது வேட்டி சட்டையில் கூலிங் கிளாஸ் போட்டு ஸ்டைலாக இருந்த தனுஷ் மகன்களின் போட்டோக்கள் வைரலானது. அப்போதே தாத்தாவைப் போலவே பேரன்கள் என ரஜினி ரசிகர்கள் பாராட்டினர். அந்தவரிசையில் தற்போது வேத்தின் புகைப்படமும் வைரலாகியுள்ளது.
லிட்டில் சூப்பர்ஸ்டார்:
இதில், ரஜினியைப் போலவே ஸ்டைலாக கால் மீது கால் போட்டு அமர்ந்திருக்கிறார் வேத். இந்தப் புகைப்படத்தைப் பார்த்து புல்லரித்துப் போன ரஜினி ரசிகர்கள், தங்களது குழந்தைகளும் அதே போல் அமர்ந்திருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர். கூடவே, லிட்டில் சூப்பர்ஸ்டார் அவர் தான் எனவும் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











