திருமணத்திற்கு முன்பு சுசீந்திரம் கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி மகள்
Recommended Video

குமரி: சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது திருமணத்திற்கு முன்பு சுசீந்தரம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா விவாகரத்திற்கு பிறகு தனது மகன் வேத் கிருஷ்ணாவுடன் அம்மா வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கும், நடிகரும், தொழில் அதிபருமான விசாகனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் திருமணம் வரும் பிப்ரவரி மாதம் 11ம் தேதி நடைபெற உள்ளது.

சவுந்தர்யா
திருமணம் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் சவந்தர்யா கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ஏழுமலையான்
முன்னதாக சவுந்தர்யா தனது அம்மா லதா ரஜினிகாந்த் மற்றும் உறவினர்களுடன் திருப்பதி கோவிலுக்கு சென்று திருமண பத்திரிகையை ஏழுமலையானின் பாதங்களில் வைத்து ஆசி பெற்று வந்தார்.

போயஸ் கார்டன்
விசாகன், சவுந்தர்யா திருமணம் போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் வீட்டில் எளிமையாக நடக்க உள்ளதாம். இந்த திருமண நிகழ்ச்சியில் உறவினர்களும், நெருங்கிய நண்பர்களும் கலந்து கொள்கிறார்களாம்.

ரசிகர்கள்
சவுந்தர்யாவை போன்றே விசாகனுக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும். இருவரும் சேர்ந்து மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என ரஜினி ரசிகர்கள் வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











