மறுமண பத்திரிகையை திருப்பதி ஏழுமலையான் பாதங்களில் வைத்து ஆசி பெற்ற ரஜினி மகள்
Recommended Video

சென்னை: தனது மறுமண பத்திரிகையை திருப்பதி ஏழுமலையானின் பாதங்களில் வைத்து பூஜை செய்துள்ளார் சவுந்தர்யா ரஜினிகாந்த்.
ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா தனது கணவர் அஸ்வின் ராம்குமாரிடம் இருந்து முறைப்படி விவாகரத்து பெற்றார். சவுந்தர்யா தனது மகன் வேதுடன் அம்மா வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் அவருக்கு மறுமணம் செய்து வைக்கிறார் ரஜினிகாந்த்.

மறுமணம்
சவுந்தர்யாவுக்கும், வஞ்சகர் உலகம் படத்தில் நடித்த விசாகனுக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவர்களின் திருமணம் ஜனவரி மாதம் நடக்கும் என்று கூறப்பட்ட நிலையில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

திருப்பதி
சவுந்தர்யாவின் திருமண பத்திரிகையை எடுத்துக் கொண்டு லதா ரஜினிகாந்த் திருப்பதிக்கு சென்றார். அவருடன் சவுந்தர்யா, உறவினர்கள், நண்பர்கள் என்று சுமார் 20 பேர் சென்றனர். நேற்று காலை திருப்பதி ஏழுமலையானின் பாதங்களில் பத்திரிகையை வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது.

சென்னை
சவுந்தர்யாவை போன்றே விசாகனுக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும். மனைவியை பிரிந்த விசாகன் நடிகர் மட்டும் அல்ல தொழில் அதிபரும் ஆவார். ரூ. 600 கோடி மதிப்புள்ள மருந்து தயாரிப்பு நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்து
மறுமணம் செய்யும் சவுந்தர்யாவுக்கு ரஜினி ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர் நல்லபடியாக வாழ கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாக சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர். தலைவர் மகளாச்சே, பாசம் இல்லாமலா இருக்கும்.


Click it and Unblock the Notifications











