பிப்ரவரி 11ம் தேதி சவுந்தர்யாவுக்கு திருமணம்: பரபரக்கும் ரஜினியின் போயஸ் கார்டன் வீடு
Recommended Video

சென்னை: சவுந்தர்யா ரஜினிகாந்தின் திருமண வேலைகள் துவங்கிவிட்டது.
ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், நடிகரும்-தொழில் அதிபருமான விசாகனுக்கும் மறுமணம் நடக்க உள்ளது. இந்நிலையில் இருவீட்டார் கலந்து கொண்ட நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
இதையடுத்து வரும் பிப்ரவரி மாதம் 11ம் தேதி அவர்களின் திருமணம் நடைபெற உள்ளது.

சவுந்தர்யா
சவுந்தர்யாவின் மறுமணத்தை ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லத்தில் வைத்து எளிமையாக நடத்த திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து வீட்டை அலங்கரிக்கும் வேலைகள் துவங்கிவிட்டன. இந்த மறுமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்கிறார்களாம்.

திருப்பதி
முன்னதாக சவுந்தர்யா தனது மறுமண அழைப்பிதழை எடுத்துக் கொண்டு திருப்பதிக்கு சென்று ஏழுமலையானின் பாதங்களில் வைத்து பூஜை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் தாய் லதா மற்றும் உறவினர்கள் சிலர் சென்றிருந்தனர்.

மறுமணம்
சென்னையில் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வரும் விசாகன் வஞ்சகர் உலகம் படத்தில் நடித்துள்ளார். அவர் நடத்தி வரும் நிறுவனத்தின் மதிப்பு ரூ. 600 கோடி என்று கூறப்படுகிறது.

வாழ்த்து
சவுந்தர்யா, விசாகன் நல்லபடியாக வாழ வேண்டும் என்று ரஜினி ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். சவுந்தர்யா, விசாகன் ஆகிய இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் ஆகும்.


Click it and Unblock the Notifications











