ஹேமா தான் உன் பொண்ணு...கண்ணம்மாவிடம் உண்மையை உடைக்கும் செளந்தர்யா

சென்னை : விஜய் டிவி சீரியல்களில் அதிக ரேட்டிங்கை பெற்ற சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. அடுத்தடுத்த திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது பாரதி கண்ணம்மா சீரியல். ரேட்டிங்கில் முதலிடத்தை கைப்பற்றுவதில் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 5 வேறு துவங்குவதால், சீரியலில் விறுவிறுப்பை கூட்டி வருகின்றனர் பாரதி கண்ணம்மா சீரியல் குழுவினர். தனது இரட்டை குழந்தை பற்றிய ரகசியத்தை தெரிந்து கொள்ள பாரதியிடம் சென்று உதவி கேட்கிறாள் கண்ணம்மா. உதவி கேட்ட போகும் கண்ணம்மா, கடைசியில் கோபமாக பாரதியிடம் சவால் விட்டு வருவதாக கடந்த வார எபிசோட் முடிந்தது.

பாரதியிடம் உதவி கேட்கும் கண்ணம்மா

பாரதியிடம் உதவி கேட்கும் கண்ணம்மா

இரட்டை குழந்தை பற்றிய ரகசியத்தை பாரதியிடம் சொல்லும் கண்ணம்மா, அதை வெண்பா கடத்தி வைத்து மிரட்டும் உண்மையையும் சொல்கிறாள். ஆனால் வழக்கம் போல் அதை நம்ப மறுக்கிறான் பாரதி. தான் கண்ணம்மாவை சந்தித்த விஷயத்தை வெண்பாவிடம் சொல்கிறார் பாரதி. இதை கேட்டு கடுப்பாகும் வெண்பா, சீக்கிரத்தில் இவர்களை பிரித்து, விவாகரத்து வாங்கி, பாரதியை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என திட்டம் போடுகிறாள் வெண்பா.

விவாகரத்து கேட்கும் வெண்பா

விவாகரத்து கேட்கும் வெண்பா

இந்நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் விவாகரத்து பேப்பருடன் சென்று கண்ணம்மாவை பார்க்கிறாள் வெண்பா. உன்னுடைய இன்னொரு குழந்தை உனக்கு வேண்டுமென்றால் இதில் கையெழுத்து போடு என மிரட்டி விட்டு செல்கிறாள். நீண்ட யோசனைக்கு பிறகு விவாகரத்து பேப்பரில் கையெழுத்து போட தயாராகிறாள் கண்ணம்மா.

 கண்ணம்மாவை தடுக்கு செளந்தர்யா

கண்ணம்மாவை தடுக்கு செளந்தர்யா

அப்போது கண்ணம்மாவின் வீட்டிற்கு வரும் செளந்தர்யாவிற்கு தெரியாமல் விவாகரத்து பேப்பரை மறைக்கிறாள் கண்ணம்மா. இதை பார்த்து கண்ணம்மாவிடம் இருந்து, என்ன பேப்பர் அது என பறித்து பார்க்கிறாள் செளந்தர்யா. இதை பார்த்து அதிர்ச்சி அடையும் செளந்தர்யாவிடம், வெண்பா தன்னை மிரட்டும் உண்மையை சொல்கிறாள் கண்ணம்மா. எனக்கு என்னுடைய இன்னொரு குழந்தை வேண்டும் என கேட்டு அழுகிறாள் கண்ணம்மா.

உண்மையை உடைக்கும் செளந்தர்யா

உண்மையை உடைக்கும் செளந்தர்யா

இதை பார்த்து ஆவேசமாகும் செளந்தர்யா, ஹேமா தான் உன்னுடைய இன்னொரு குழந்தை. ஹேமா தான் நீ பெத்த பிள்ளை என்று உண்மையை உடைக்கிறாள். இதை கேட்டு அதிர்ச்சி அடையும் கண்ணம்மாவிடம் நடந்த உண்மைகளை சொல்கிறார் செளந்தர்யா. அனைத்து கேட்டு விட்டு, ஹேமா என கதறி அழுகிறாள் கண்ணம்மா. இப்படியாக இந்த வார ப்ரோமோ முடிகிறது.

காத்திருக்கும் ரசிகர்கள்

காத்திருக்கும் ரசிகர்கள்

இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள், அப்பாடா...ஒரு வழியாக கண்ணம்மாவிடம் உண்மையை சொல்லி விட்டீர்களா என கேட்டுள்ளனர். இந்த சீனை பார்க்க ஆவலாக காத்திருப்பதாக சிலரும், இனி வெண்பாவை வச்சு செய்ய போகிறார் கண்ணம்மா என சிலரும் கமெண்ட் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X