சொக்கத்தங்கம் சார் செளந்தர்யா ரஜினிகாந்த்.. நாகர்கோவில் மக்களுக்கு என்ன பண்ணாருன்னு பாருங்க!

சென்னை: நாகர்கோவிலில் உள்ள ஆனந்தா திருமண மண்டபத்தில் மே 15-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. Apex Laboratories நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் (CSR) கீழ் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தலைமை வகித்தார்.

நாகர்கோவில் ரவுண்ட் டேபிள் 176 (Nagercoil Round Table 176) மற்றும் நாகர்கோவில் லேடீஸ் சர்க்கிள் 196 (Nagercoil Ladies Circle 196) ஆகிய அமைப்புகள் இணைந்து இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். இதில் சிறப்பு விருந்தினராகத் வித் லவ் பட தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியன் (Magesh Raj Pasilian) கலந்துகொண்டார்.

Soundarya Rjainikanth done welfare things for Nagercoil people grabs fans attention

சொக்கத்தங்கம் செளந்தர்யா ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பாளராக வித் லவ் படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை இந்த ஆண்டு முதல் தடவையாக ருசித்தார். அப்பா வெற்றியின் சந்தோஷம் இப்படித்தான் இருக்குமா என்று அவர் கேட்டது எல்லாம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், மக்களுக்கு செய்ய வேண்டிய நலத்திட்ட உதவிகளை செய்ய முன் வந்துள்ள செளந்தர்யாவின் மனசை சொக்கத் தங்கம் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நாகர்கோவிலில் நலத்திட்ட உதவிகள்: நாகர்கோவில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார் செளந்தர்யா ரஜினிகாந்த். 'ஸ்ரீ பாலாஜி ஆர்த்தோடிக்ஸ்' (Sree Balaji Orthotics) நிறுவனம் தயாரித்த 27 செயற்கைக் கால்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு டவுன் டு எர்த்தாக செளந்தர்யா ரஜினிகாந்தே செயற்கைக் கால்களை பொருத்திய காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளன.

Soundarya Rjainikanth done welfare things for Nagercoil people grabs fans attention

மகளிருக்கு மின்சார ஆட்டோக்கள்: பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 5 பெண்களுக்கு மின்சார ஆட்டோக்கள் (E-Autos) வழங்கப்பட்டன. சுமார் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம், சமூக நலன் மற்றும் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தை முதன்மை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சௌந்தர்யா ரஜினிகாந்த் பயனாளிகளுக்கு நேரில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வாழ்த்தினார்.செளந்தர்யா ரஜினிகாந்த் தொடர்ந்து இதுபோன்ற பொதுநல திட்டங்களை மக்களுக்கு செய்திட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X