பொள்ளாச்சி- முகம் தெரியாதவனுடன் எதற்கு உரிமையுடன் பேசணும்?: சவுந்தர்யா
Recommended Video

சென்னை: முகம் தெரியாதவனுடன் எதற்கு உரிமையுடன் பேச வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை சவுந்தர்யா.
யுவர்ஸ் ஷேம்ஃபுல்லி குறும்படம் புகழ் சவுந்தர்யா பொள்ளாச்சி பெண்ணின் கதறல் வீடியோவை பார்த்துள்ளார். யுவர்ஸ் ஷேம்ஃபுல்லி 2 மூலம் சமூகத்திற்கு முக்கிய கருத்து தெரிவித்த அவர் தற்போது பெண்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
அவர் அக்கறையுடன் அறிவுரை வழங்கி வம்பில் மாட்டிக் கொண்டார். பொள்ளாச்சி சம்பவம் பற்றி அவர் கூறியதாவது,

பசங்க
பொள்ளாச்சி பெண்ணின் வீடியோவை பார்த்தேன். தெரியாத பசங்களிடம் நம்பர் கொடுத்து பேசாதீங்க பெண்களே. பசங்களும் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள். அடுத்தவர்களின் வாழ்க்கையை அழிப்பதில் என்ன கிடைக்கிறது. இருக்கிறது ஒரு வாழ்க்கை. அதை நிம்மதியாக வாழ்ந்துவிட்டு போவோமே.

ஜாக்கிரதை
முகம் தெரியாத ஒருத்தனுடன் எதற்கு அவ்வளவு உரிமையுடன் பேச வேண்டும். பெண்களே, ஜாக்கிரதையாக இருங்க. அனைவரையும் நம்பாதீங்க. பசங்களே, உங்களின் தோழிகளுக்கு பாதுகாப்பாக இருங்க. அவங்க யாராவது தப்பான பையனுடன் பேசினால் புத்திமதி சொல்லுங்க. அந்த பெண்ணின் வாழ்க்கை இனிமேலாவது நல்லா இருக்கணும் என்று பிரார்த்தனை செய்வோம் என்றார் சவுந்தர்யா.

விமர்சனம்
சவுந்தர்யாவின் அறிவுரையை பார்த்த பலர் அது என்ன பெண்களை ஜாக்கிரதையாக இருக்குமாறு கூறுவது. அந்த நாய்கள் பற்றி நீங்க எதுவும் பேசவில்லையே என்று விமர்சித்தனர். அதற்கு சவுந்தர்யா விளக்கம் அளித்துள்ளார்.

அக்கறை
வக்கிர புத்தி இருக்கும் ஆண்களை பற்றி பேசி புண்ணியம் இல்லை. அதனால் தான் பெண்களை ஜாக்கிரதையாக இருக்குமாறு கூறினேன். சமூக வலைதளத்தில் உள்ளவர்களை ஏன் நம்ப வேண்டும். பெண்கள் யாரையும் எளிதில் நம்பிவிடுவார்கள். இந்த காலத்தில் யாரையும் எளிதில் நம்பக் கூடாது. நான் பெண்களை குறை சொல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை என சவுந்தர்யா விளக்கம் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











