»   »  கபாலி வெற்றிக்காக காளஹஸ்தி கோயிலில் சிறப்புப் பிரார்த்தனை!

கபாலி வெற்றிக்காக காளஹஸ்தி கோயிலில் சிறப்புப் பிரார்த்தனை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி படத்தின் வெற்றிக்காக ஆந்திராவில் உள்ள காளஹஸ்தி கோயிலில் ரஜினி மகள் சௌந்தர்யா சிறப்புப் பிரார்த்தனை நடத்தினார்.

ரஜினி நடித்துள்ள ‘கபாலி' படத்தின் பாடல்கள் கடந்த 11-ந்தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. பாடல்கள் ரசிகர்களின் அமோக வரவேற்வை பெற்றுள்ளன.


புதிய டீசர்

புதிய டீசர்

இந்த நிலையில் நேற்று படத்தின் இரண்டாவது டீசர் வெளியிடப்பட்டது. 35 நொடிகள் ஓடக்கூடிய அந்த முன்னோட்டப் படத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.


ரிலீஸ்

ரிலீஸ்

‘கபாலி' படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை முதல் தேதி ரிலீஸ் என முதலில் சொல்லப்பட்டது. இப்போது ஜூலை 7 அல்லது 15-ம் தேதி வெளியாகும் என்கிறார்கள்.


சௌந்தர்யா

சௌந்தர்யா

கபாலி படம் உருவாக முக்கிய காரணமே சௌந்தர்யாதான். அவர்தான் ரஞ்சித்தை ரஜினிக்கு அறிமுகம் செய்து வைத்தார். கபாலியின் வெற்றி அவருக்கு மிக முக்கியம்.


பிரார்த்தனை

பிரார்த்தனை

எனவே ‘கபாலி' படம் வெற்றி பெறுவதற்காக காளஹஸ்தி கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினார் சௌந்தர்யா. நேற்று காளஹஸ்தி கோவிலுக்கு சென்று, அங்கு ராகு கேதுவுக்கு சிறப்பு பூஜை செய்தார்.


பின்னர் வாயுலிங்கேஸ்வரர், ஞான பிரசுணம்பிகா தாயாரை வழிபட்டார். குரு தட்சணாமூர்த்தி முன்பு வேத பண்டிதர்களிடம் ஆசி பெற்றார்.பெரிய வெற்றி நிச்சயம்

பின்னர் சௌந்தர்யா நிருபர்களிடம் கூறுகையில், "கபாலி' படம் எல்லா தரப்பினரையும் கவரும் வகையில் உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு ரசிகர்களை இந்த படம் கவரும். பெரிய வெற்றிப் படமாக அமையும். இந்த படம் வெற்றிக்காக வாயுலிங்கேஸ்வரரின் ஆசியை பெறுவதற்காக இங்கு வந்தேன்," என்றார்.


English summary
Soundarya Rajinikanth has visited Kalahasthi Temple and performed prayer for the success of Kabali.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil