"எல்லோரும் ஓரமாப் போங்க.. லிட்டில் சூப்பர்ஸ்டார் என் மகன் தான்".. சொல்லாமல் சொல்கிறாரா ரஜினி மகள்?

சௌந்தர்யா தனது மகன் வேத் ரஜினி போன்றே ஸ்டைலாக இருப்பதாக புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.

சென்னை: தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக இருந்து வரும் கேள்வி அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பது தான். ரஜினி மட்டுமே சூப்பர்ஸ்டார் அவர் இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது என்ற போதும், லிட்டில் சூப்பர் ஸ்டார் பட்டமாவது எங்களுக்கு கொடுங்களேன் என பலர் வரிசையில் உள்ளனர்.

இந்நிலையில், இவர் தான் உண்மையான லிட்டில் சூப்பர்ஸ்டார் என ரஜினி வீட்டில் இருந்தே ஒருவர் கிளம்பியிருக்கிறார். அவர் வேறு யாருமல்ல, ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவின் மகன் வேத் தான்.

சௌந்தர்யாவும் இதனை மறைமுகமாகச் சொல்வது போல், 'தாத்தா ரஜினி மாதிரியே, நிக்குறான், சிரிக்கிறான், ஸ்டைல் பண்றான்' என அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.

வேத்:

வேத்:

சௌந்தர்யாவின் இரண்டாவது திருமணத்திற்குப் பிறகு தான் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானான் வேத். திருமண வீட்டில் தனுஷின் இரண்டு மகன்களும் ஸ்டைல் காட்டிய போதும், தனது குழந்தைத்தனத்தால் மக்களை கவர்ந்தான் அந்தக் குட்டிப்பையன். சௌந்தர்யாவும் நாலு வயதாகும் அந்த சுட்டிப் பையனின் ஸ்டைல் படங்களை அவ்வப்போது தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

ரஜினி மாதிரியே ஸ்டைல்:

கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டிருந்த ஒரு புகைப்படத்தில் காரில் அமர்ந்திருக்கும் வேத், கால் மேல் கால் போட்டு ரஜினி மாதிரியே ஸ்டைலாக இருந்தான். அப்பதிவில் சௌந்தர்யா, ‘ஸ்டைல் அவன் ரத்தத்திலேயே கலந்திருக்கிறது. அதே ரத்தம் அப்டித்தானே இருக்கும்' எனத் தெரிவித்திருந்தார்.

தாத்தாவைப் போலவே பேரன்:

இதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன் செளந்தர்யா, ரஜினி கபாலி படத்தில் நிற்பது போலவே, தன் மகன் வேத் நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டு, ‘தாத்தாவைப் போலவே பேரனும்' எனக் குறிப்பிட்டுள்ளார். உண்மையிலேயே அப்புகைப்படத்தில் ரஜினியைப் போலத்தான் வேத் நின்று கொண்டிருக்கிறார். இந்தப் படத்திற்கு ரஜினி ரசிகர்கள் லைக்ஸ் மழை பொழிந்து வருகிறார்கள்.

ரசிகர்கள் கோபம்:

இது ஒருபுறம் இருக்க, சௌந்தர்யா அடிக்கடி தனது டிவீட்டில் ரஜினியை தாத்தா, தாத்தா எனக் கூறி வருவது அவரது ரசிகர்களை எரிச்சல் அடைய வைத்துள்ளது. ‘ஹலோ சிஸ்டர் தாத்தா லாம் உங்க வீட்ல வச்சிகோங்க ஸ்ட்ராங் மேன் சிஸ்டர்... வயசெல்லாம் வெறும் நம்பர் தான்' என உரிமையாக சௌந்தர்யாவைத் திட்டியிருக்கிறார் இந்த ரசிகர்.

லிட்டில் சூப்பர்ஸ்டார்:

லிட்டில் சூப்பர்ஸ்டார்:

ஏற்கனவே நடிகர் சிம்பு தன் சிறுவயதில் லிட்டில் சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துடன் அழைக்கப்பட்டார். பின்னர் அவர் வளர்ந்ததும் அப்பட்டம் அவரை விட்டு நீங்கி விட்டது. அடுத்ததாக தனுஷ் ரஜினி வீட்டு மாப்பிள்ளையாக, அவர் தான் அடுத்த சூப்பர்ஸ்டாரா என்ற பேச்சு எழுந்தது. ஆனால், சூப்பர்ஸ்டார் ரஜினி ஒருவர் மட்டுமே என ரசிகர்கள் ஆணித்தரமாக சொல்லி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X