“கடவுள் நம்முடன் இருக்கிறார்”.. விசாகனுடன் ஹனிமூன் சென்ற இடத்திலும் மகன் நினைவில் சவுந்தர்யா!

கணவர் விசாகனுடன் ஹனிமூன் சென்றுள்ள சவுந்தர்யா, அங்கு எடுத்த புகைப்படங்களை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

Recommended Video

கணவருடன் தேனிலவு சென்ற சவுந்தர்யா ரஜினிகாந்த்- வீடியோ

சென்னை: சமீபத்தில் திருமணம் முடிந்த ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா, தனது கணவருடன் தேனிலவு சென்ற படங்களை வெளியிட்டுள்ளார்.

நடிகர் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவிற்கு கடந்த வாரம் இரண்டாவது திருமணம் நடைபெற்றது. இதனால் ரஜினியின் வீடு திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. திருமணத்தின் போதும், அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய நிகழ்ச்சிகளின் போதும் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ரசிகர்கள் ஆர்வமாக சமூகவலைதளங்களில் பகிர்ந்தனர்.

அதிலும் குறிப்பாக திருமணத்தின் போது, மகள் கைகளைப் பிடித்துக் கொண்டு ரஜினி நெகிழும் போட்டோ, மகன் வேத்தை தன் மடியில் அமர்த்தி விசாகனுடன் சவுந்தர்யா அமர்ந்திருக்கும் போட்டோ, தனுஷின் மகன் ரஜினி போலவே ஸ்டைலாக போஸ் கொடுத்த போட்டோ என பல வைரல் ஆனது.

சவுந்தர்யா ஹனிமூன்:

சவுந்தர்யா ஹனிமூன்:

இந்நிலையில், திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் பறந்துள்ளனர் புதுமணத் தம்பதி. ஐஸ்லேந்து சென்றுள்ள அவர்கள், அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

மகன் நினைவு:

மகன் நினைவு:

உறைபனிக்கு நடுவே எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சவுந்தர்யா. அந்தப் புகைப்படத்தில் தனது மகிழ்ச்சியை பல ஹேஷ்டேக் மூலம் அவர் வெளிப்படுத்தியுள்ளார். கூடவே மகன் வேத்தை அழைத்துச் செல்ல முடியவில்லையே என்ற ஏக்கத்தையும் அவர் பதிவு செய்துள்ளார்.

ரசிகர் கவலை:

சவுந்தர்யாவின் இந்தப் பதிவிற்கு ரஜினி ரசிகர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு ரசிகர், ‘வேத்தின் மனநிலை பற்றி அதிகம் பீல் செய்திருக்கிறார். சவுந்தர்யாவின் இரண்டாவது திருமணத்தால் அவர் தனிமையில் இருப்பதாக நினைத்து விடுவாரோ என்பது அவரது கவலை.

வாழ்த்துக்கள்:

ஆனால், இந்த ரசிகரின் பதிவிற்கு பதிலாக மற்றொரு ரசிகர் வெளியிட்டுள்ள பதிவில், ‘லதாரஜினி பார்த்துக் கொள்வார்' எனத் தெரிவித்துள்ளார். வேறொரு ரசிகரோ, ‘கவலைகளை மறந்து கிடைத்துள்ள வாழ்வைக் கொண்டாடுங்கள் சகோதரி' என வாழ்த்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X