அக்கா கணவர் தனுஷை இயக்க ஆசைப்படும் 'கோச்சடையான்' சவுந்தர்யா

சென்னை: தனது அக்கா கணவரும், தேசிய விருது வாங்கிய நடிகருமான தனுஷை வைத்து படமொன்று இயக்க வேண்டுமென்று விருப்பம் தெரிவித்துள்ளார் ரஜினியின் இளைய மகளும், கோச்சடையான் பட இயக்குநருமான சவுந்தர்யா.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்-லதா தம்பதியினருக்கு இரண்டு மகள்கள். மூத்தவரான ஐஸ்வர்யா பிரபல நடிகர் தனுஷின் மனைவி. இவர் தனது கணவர் தனுஷை வைத்து '3' என்ற படத்தை இயக்கினார்.

ரஜினியின் இளைய மகளான சவுந்தர்யா, தனது தந்தையான ரஜினியை நடிக்க வைத்து 'கோச்சடையான்' என்ற 3டி படத்தை உருவாக்கியுள்ளார். இந்நிலையில் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் ஒரு படத்தை இயக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார் சவுந்தர்யா.

அடுத்தது ராணா தான்...

அடுத்தது ராணா தான்...

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பையில் செய்தியாளார்களைச் சந்தித்த சவுந்தர்யா, கோச்சடையானைத் தொடர்ந்து ‘ராணா' படத்தை இயக்க இருப்பதாக தெரிவித்தார்.

திடீர் திருப்பம்....

திடீர் திருப்பம்....

இதன்மூலம், சவுந்தர்யாவின் அடுத்த படமும் ரஜினியுடையது தான் என அனைவரும் எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில் திடீர் திருப்பமாக தனது ஆசை ஒன்றை வெளியிட்டுள்ளார் சவுந்தர்யா. அதாவது தனது இயக்கத்தில் தனுஷ் நடிக்க வேண்டும் என சவுந்தர்யா தெரிவித்துள்ளார்.

அற்புதமான நடிப்பு...

அற்புதமான நடிப்பு...

இது தொடர்பாக சவுந்தர்யா கூறுகையில், ‘ராஞ்சனாவின் தமிழ்ப் பதிப்பான அம்பிகாபதியில் தனுஷின் நடிப்பை பார்த்து அசந்து விட்டேன். அற்புதமான நடிப்பு.

பாராட்டு...

பாராட்டு...

குண்டன் கதாபாத்திரத்திற்கு தனுஷ் அப்படியே பொருந்திப் போயிருந்தார். இதனை அவரை நேரில் பார்த்தபோது கூறி நான் அவரைப் பாராட்டினேன்.

விரைவில் எதிர்பார்க்கலாம்...

விரைவில் எதிர்பார்க்கலாம்...

அவருடைய கால்ஷீட்டை எனக்கு கொஞ்சம் ஒதுக்கித் தந்தால் அவரை இயக்க நான் ஆர்வமாக உள்ளேன். விரைவில் எங்கலது கூட்டணியில் படம் உருவாகும்' என சவுந்தர்யா நம்பிக்கைத் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X