மகளின் மறுமண வரவேற்புக்கு வந்தவர்களுக்கு வித்தியாசமான பரிசு கொடுத்த ரஜினி
Recommended Video

சென்னை: சவுந்தர்யா ரஜினிகாந்த், விசாகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா, விசாகன் வணங்காமுடியின் திருமணம் வரும் 10ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
வரவேற்பு நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

விசாகன்
சவுந்தர்யா பட்டுப்புடவையிலும், விசாகன் பட்டு வேட்டி, சட்டையிலும் மாலையும் கழுத்துமாக நிற்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதை பார்த்த ரஜினி ரசிர்கள் அவரை வாழ்த்தியுள்ளனர்.

அன்பளிப்பு
திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு விதை பந்தை அன்பளிப்பாக அளித்துள்ளார் ரஜினிகாந்த். அவரின் இந்த வித்தியாசமான முயற்சி வரவேற்பை பெற்றுள்ளது.

தனுஷ்
தங்கச்சி சவுந்தர்யா அருகில் அக்கா ஐஸ்வர்யா நிற்கிறார். ஆனால் புகைப்படங்களை பார்ப்பவர்கள் எங்க தனுஷ் எங்கே பாஸ் என்று தான் தேடுகிறார்கள். ரஜினி வீட்டு விசேஷத்தில் மூத்த மருமகன் இல்லாமலா, இருக்கிறார். ஆனால் வெளியான புகைப்படங்களில் மட்டுமே அவர் இல்லை.
ரசிகர்கள்
சவுந்தர்யாவுக்கு நல்ல வாழ்க்கை அமைந்துள்ளதை பார்த்து ரஜினியை போன்றே அவரின் ரசிகர்களும் நிம்மதி அடைந்துள்ளனர். அவர் நன்றாக வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











