திரைத் துளி

By Staff

நடிகை செளந்தர்யா - சாப்ட்வேர் என்ஜினியர் ரகு ஆகியோரின் திருமணம் பெங்களூரில் நடந்தது.

தமிழில் "பொன்னுமணி" படத்தின் மூலம் அறிமுகமான செளந்தர்யா "படையப்பா", "அருணாசலம்","சொக்கத் தங்கம்", "தவசி" உள்பட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் கன்னடம், தெலுங்குமற்றும் மலையாளப் படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கும் அவருடைய முறை மாமனான ரகுவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.அதன்படி நேற்று பெங்களூரில் அவர்களுடைய திருமணம் நடைபெற்றது.

பெங்களூர் புறநகர்ப் பகுதியான ராஜன்குண்டேயில் உள்ள அங்சாலா ரெசார்ட் ஹோட்டலில்செளந்தர்யா-ரகு திருமணம் நடைபெற்றது.

நேற்று காலை 10 மணிக்கு செளந்தர்யாவின் கழுத்தில்தாலி கட்டினார் ரகு.

இந்தத் திருமணத்தில் கலந்து கொள்ள நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும்நடிகர்-நடிகைகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனால் அழைப்பிதழ்கள்உள்ளவர்கள் மட்டுமே திருமண விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

அதேபோல் பத்திரிக்கை நிருபர்களும் திருமண விழாவில் கலந்து கொள்ள அனுமதிமறுக்கப்பட்டனர். அவர்கள் வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். செளந்தர்யா திருமணத்தின்புகைப்படத்தை எடுப்பதற்குக் கூட பத்திரிக்கை போட்டோகிராபர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று மாலை திருமணம் நடந்த அதே ஹோட்டலில் வைத்து திருமண வரவேற்புநிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பல நடிகர்-நடிகைகள் கலந்து கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X