அடடா.. ரஜினி வீட்ல விசேஷம்.. சவுந்தர்யா போட்ட டிவிட்.. வைரலாகும் போட்டோஸ்.. வாழ்த்தும் நெட்டிசன்ஸ்!
சென்னை: சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.
Recommended Video
நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யா ரஜினிகாந்த். திரைப்பட இயக்குநரான இவர் தனது தந்தையான ரஜினிகாந்தை வைத்து கோச்சடையான் என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.
பெங்களூரை சேர்ந்த தொழிலதிபரான அஷ்வின் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு வேத் என்ற மகன் உள்ளார்.

மகன் வேத்
இந்நிலையில் தனது முதல் கணவரை விவாகரத்து செய்த சவுந்தர்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் விசாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். முதல் கணவருக்கு பிறந்த மகன் வேத்தை தன்னுடனே வைத்துள்ளார் சவுந்தர்யா.

5வது வயதில்
இந்நிலையில் சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவருடன் சேர்ந்து மகன் வேத்தின் பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறார். அந்த போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் தங்களின் மகன் 5வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

நெட்டிசன்கள் வாழ்த்து
எல்லா நாளும் அவரை கொண்டாடுவதாக தெரிவித்துள்ள சவுந்தர்யா, எங்களின் குட்டி ஏஞ்சலுக்கு கடவுளின் ஆசிர்வாதம் கிடைக்கட்டும்.. வேத் பாப்பா என குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிவையும் போட்டோவையும் பார்த்த நெட்டிசன்கள் வேத்திற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளனர்.

ஜப்பான் தலைவர் ரசிகர்கள்
ரஜினியின் ரசிகர்கள் பலர், அவரது பேரனான வேத்துக்கு என பிறந்தநாள் போஸ்டர்களே அடித்து வைரலாக்கி வருகின்றனர். ஜப்பான் நாட்டை சேர்ந்த ரஜினியின் ரசிகர்களும் அவர்களின் டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளனர். ஜப்பான் தலைவர் ரசிகர்கள் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வேத் குட்டி என கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











