உச்ச நடிகரின் வீட்டில் களைக்கட்டிய கிறிஸ்துமஸ்.. கணவருடன் ஒய்யாரமாய் வாழ்த்து சொன்ன மகள்!
சென்னை: சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யா ரஜினிகாந்த். திரைப்பட இயக்குநரான இவர் தனது தந்தையான ரஜினிகாந்தை வைத்து கோச்சடையான் என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.
ஏற்கனவே திருமணமான சவுந்தர்யா முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு கடந்த பிப்ரவரி மாதம் விசாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

கணவருடன்
விசாகன், தொழிலதிபர் ஆவார். இந்நிலையில் சவுந்தர்யா தனது வீட்டில் குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடியுள்ளார். வீட்டில் அமைக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரத்திற்கு அருகில் நின்றபடி தனது கணவருடன் போட்டோ எடுத்துள்ளார் சவுந்தர்யா.

சாண்டா டிரெஸ்
இதேபோல் தங்கள் வீட்டு குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா டிரெஸ் போட்டுவிட்டு அந்த போட்டோக்களையும் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டியிருக்கிறார் சவுந்தர்யா ரஜினிகாந்த்.
குவியும் லைக்ஸ்
மேலும் தங்களின் குடும்பத்தினர் சார்பாக சவுந்தர்யா ரஜினிகாந்த் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். சவுந்தர்யா ஷேர் செய்திருக்கும் இந்த போட்டோக்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
வைரல் போட்டோஸ்
சவுந்தர்யாவின் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கு பலரும் நன்றி தெரிவித்திருப்பதோடு பதிலுக்கு வாழ்த்தும் கூறியுள்ளனர். சவுந்தர்யாவின் இந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











