கண்ணாடி மாளிகை... இந்த பக்கம் வீடு... அந்தப்பக்கம் ஸ்டூடியோ... ஏ.ஆர்.ரகுமான் ஸ்டைலில் அனிருத்

By

சென்னை: இசை அமைப்பாளர் அனிருத், நுங்கம்பாக்கத்தில் புதிதாக வாங்கியுள்ள அபார்ட்மென்டில் அதி நவீன ஸ்டூடியோவை கட்ட இருக்கிறார்.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 3 படம் மூலம் இசை அமைப்பாளர் ஆனவர் அனிருத். ஒரே ஒரு, கொலைவெறி பாடல் மூலம் ரசிகர்களை கப்பென பிடித்தவர்.

அடுத்து, வணக்கம் சென்னை, வேலையில்லா பட்டதாரி, மான் கராத்தே, கத்தி, நானும் ரவுடிதான் என தொடர்ந்தவர், ரஜினியின் பேட்ட, தர்பார் படங்களுக்கும் இசை அமைத்து உயர்ந்தார்.

இப்போது கமலினின் இந்தியன் 2, விஜய்யின் மாஸ்டர் படங்களுக்கும், சார் தான் இசை அமைப்பாளர்.

முத்த சர்ச்சை

முத்த சர்ச்சை

இடையில் ஆண்ட்ரியாவுடன் முத்த போட்டோ, பீப் பாடல் போன்ற சர்ச்சைகளில் சிக்கிய அனிருத், இப்போது நல்ல பிள்ளை மற்றும் செல்லப்பிள்ளையாக இருக்கிறார்.

ஏ.ஆர்.ரகுமான் ஸ்டைல்

ஏ.ஆர்.ரகுமான் ஸ்டைல்

இந்த அனிருத், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டைலை பின்பற்றத் தொடங்கி இருக்கிறார் இப்போது. அதாவது மும்பையில் அபார்ட்மென்ட் ஒன்றில் ஒரு புளோரை மொத்தமாக வாங்கியுள்ள ஏ.ஆர்.ரகுமான், ஒரு பகுதியை வீடாகவும் மறுபகுதியை ரெக்கார்டிங் ஸ்டூடியோவாகவும் மாற்றியிருக்கிறார்.

ரூ.15 கோடியில்

ரூ.15 கோடியில்

இதே போல அனிருத்தும் இப்போதும் இறங்கியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காதர் நவாஸ்கான் சாலையில் அபார்ட்மென்ட் ஒன்றில் ஒரு தளத்தை, மொத்தமாக வாங்கியுள்ளாராம் அனிருத். இதன் மதிப்பு, ரூ.15 கோடி என்கிறார்கள்.

நவீன ஸ்டூடியோ

நவீன ஸ்டூடியோ

இங்கு ஒரு பகுதியில் வீட்டையும், மறுபகுதியில் அதி நவீன ரெக்கார்டிங் ஸ்டூடியோவையும் அமைத்துக்கொள்ள அனிருத் முடிவு செய்துள்ளார் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். ஆனால், அனிருத் தரப்பில் இதுபற்றி எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X