twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சூர்யா ஃபேன்ஸ் ரெடியா... சூர்யா 41 அப்டேட் வருது... இன்னைக்கு தரமான சம்பவம் காத்திருக்கு

    |

    சென்னை : டைரக்டர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்திற்கு சூர்யா 41 என தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பிதாமகன் படத்திற்கு பிறகு சூர்யா - பாலா கூட்டணி மீண்டும் இணைந்துள்ள இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து வருகிறது.

    Recommended Video

    பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வணங்கான் | ஜெயமோகனின் கதை? *Entertainment

    ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இந்த படத்தின் முதல் கட்ட ஷுட்டிங் கன்னியாக்குமரி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டது. இந்த படத்தில் சூர்யா மீனவர் ரோலில் நடிப்பதாக தகவல் வெளியானது.

    விக்ரம், ராக்கெட்ரி என வரிசையாக சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து வரும் படங்கள் கவனத்தை ஈர்த்து, ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ள நிலையில்,பாலா இயக்கத்தில் சூர்யா மீண்டும் நடிக்கிறார் என்ற சூர்யா 41 படமும் அனைவராலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக மாறி உள்ளது.

    நயன்-விக்கிக்கு திருமண வாழ்த்து சொன்ன..பாலிவுட் பிரபல நடிகை !நயன்-விக்கிக்கு திருமண வாழ்த்து சொன்ன..பாலிவுட் பிரபல நடிகை !

    பரபரப்பை கிளப்பிய சூர்யா 41

    பரபரப்பை கிளப்பிய சூர்யா 41

    சூர்யா 41 படத்தில் இருந்து பாலா நீக்கப்பட்டார், சூர்யா 41 படம் பாதியில் கைவிடப்பட்டது, சூர்யா - பாலா இடையே கருத்து வேறு என பல வதந்திகள் கிளம்பி பரபரப்பாக்கை கிளப்பிய சூர்யா 41 படத்தின் அடுத்த கட்ட ஷுட்டிங் கோவாவில் நடப்பதாக படக்குழுவே அறிவித்திருந்தது. இங்கு பாடல் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

    ஆர்வத்தில் ரசிகர்கள்

    ஆர்வத்தில் ரசிகர்கள்

    சூர்யா 41 படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடக்கிறது. ஆனால் இதுவரை படம் பற்றி எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இது வழக்கமான பாலா படம் கிடையாது வித்தியாசமான, மாஸான படமாக இருக்க போகிறது என சொல்லி ரசிகர்களின் ஆர்வத்தை துண்டி வருவதால், படம் எப்போ வரும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

    பாலாவை மறந்துட்டீங்களே பாஸ்

    பாலாவை மறந்துட்டீங்களே பாஸ்

    இதற்கிடையில் இம்மாதம் 22 ம் தேதி சூர்யாவின் பிறந்தநாள் வர உள்ளதால், பிறந்தநாள் ஸ்பெஷல் ட்ரீட்டாக சூர்யா 41 படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட்லுக் என ஏதாவது ஒரு அப்டேட் வெளியிடுவார்கள் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.ஆனால் சூர்யா பிறந்தநாளுக்கு முன் டைரக்டர் பாலாவிற்கு பிறந்தநாள் என்பதை ரசிகர்கள் மறந்தே விட்டார்கள்.

    இன்று சூர்யா 41 அப்டேட் வருதா

    இன்று சூர்யா 41 அப்டேட் வருதா

    ஆமாம். இன்று டைரக்டர் பாலாவின் பிறந்தநாள். இதை கொண்டாடும் விதமாக சூர்யா 41 படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது படத்தின் டைட்டில் அல்லது ஃபர்ஸ்ட்லுக்காக இருக்கலாம் என ரசிகர்கள் ஆர்வமாக பார்த்திருக்கிறார்கள். என்ன அப்டேட் என தெரிந்து கொள்ளவும் ஆர்வமாக உள்ளனர்.

    கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

    கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

    இந்த தகவலால் #Suriya, #Suriya41, #VaadiVasal போன்ற ஹேஷ்டேக்குகளை நெட்டிசன்கள் டிரெண்டாக்கி வருகிறார்கள். சூர்யா மற்றும்ண சூர்யா 41 படம் பற்றிய பல தகவல்களை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

    English summary
    According to latest sources, Due director Bala's birthday Suriya 41 team planned to release new update today. Suriya 41 update will come today 6 pm. Suriya fans are eagerly waiting to celebrate this.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X