Don't Miss!
- News
மக்களே உஷார்.. டிஜிபி சைலேந்திரபாபு பெயரில் போலி எஸ்எம்எஸ் .. ஏமாற வேண்டாம் என போலீஸ் எச்சரிக்கை
- Finance
அட இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. ரூபாயின் மதிப்பு மீண்டும் ஏற்றம்.. என்ன காரணம்?
- Sports
"தனிமையில் சிக்கி தவிக்கிறேன்".. விராட் கோலியின் உருக்கமான பேச்சு.. ரசிகர்கள் சோகம் - விவரம்!
- Lifestyle
ஒயிட் சாஸ் பாஸ்தா
- Technology
ஒன்றா, இரண்டா குறிப்பிடுவதற்கு? பட்ஜெட் விலையில் அறிமுகமான Noise ColorFit Ultra ஸ்மார்ட்வாட்ச்!
- Automobiles
இன்னும் ரெண்டே நாள்தான் இருக்கு... உச்சகட்ட எதிர்பார்ப்பில் மஹிந்திரா ஸ்கார்பியோ ரசிகர்கள்! எதற்காக தெரியுமா?
- Travel
இயற்கை ஆர்வலர்களின் பக்கெட் லிஸ்ட்டில் இருக்கும் ஒரு புதையல் – கர்நாடகாவில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
என்னது...ஜுலை 8 ல் பொன்னியின் செல்வன் டீசர் ரிலீசா...தீயாய் பரவும் தகவல்
சென்னை : டைரக்டர் மணிரத்னம் இயக்கிய வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் ரிலீசுக்கு தயாராக உள்ளது. லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
செப்டம்பர் 30 ம் தேதி உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் பொன்னியின் செல்வன் ரிலீசாக உள்ளது. தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமாவே எதிர்பார்க்கும் படமாக பொன்னியின் செல்வன் உள்ளது.
இரண்டு பாகங்களாக தயார் செய்யப்பட்டுள்ள பொன்னியின் செல்வனின் முதல் பாகம் தயாராகி விட்டது. இரண்டாம் பாகத்தை 2023 ல் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
’காவிக்
கொடியை
பறக்கவிட்டாரா
மணிரத்னம்’..
ப்ளூ
சட்டை
மாறன்
அடுத்த
பஞ்சாயத்தை
ஆரம்பிச்சிட்டாரு!

டீசருக்காக காத்திருக்கும் ரசிகர்கள்
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசர் எப்போது வெளியிடப்படும் என ரசிகர்கள் பல மாதங்களாக காத்திருக்கிறார்கள். ஆனால் இதுவரை டீசர் ரிலீஸ் பற்றி எந்த தகவலையும் படக்குழு வெளியிடவில்லை. ஆனால் தஞ்சையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த டீசர் வெளியீட்டு விழா பிளான் கைவிடப்பட்டதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவி வருகிறது.

சென்னையில் டீசர் ரிலீசா
நிஜமாகவே படக்குழு தஞ்சையில் தான் டீசரை வெளியிட திட்டமிட்டதா என தெரியாது. ஆனால் தஞ்சை கோயில் சென்டிமென்ட் காரணமாக பலரும் பட விழாவில் பங்கேற்க தயங்கியதால் சென்னை நேரு ஸ்டேடியத்தில் டீசர் வெளியீட்டை நடத்த படக்குழு ஏற்பாடு செய்து வருவதாகவும், இந்த விழாவில் ரஜினி, கமல் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.

போஸ்டர் வெளியிடும் படக்குழு
ரசிகர்கள் டீசரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் படத்தின் ப்ரொமோஷனாக, முக்கிய கேரக்டர்களின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. முதல் நாளில் ஆதித்ய கரிகாலன் ரோலில் நடிக்கும் விக்ரமின் போஸ்டர், இரண்டாம் நாளில் வந்தியத் தேவன் ரோலில் நடிக்கும் கார்த்தியின் போஸ்டர் ஆகியன வெளியிடப்பட்டன.இதைத் தொடர்ந்து இன்று, நந்தினி கேரக்டரில் நடிக்கும் ஐஸ்வர்யா ராயின் போஸ்வரை வெளியிட்டுள்ளனர்.

நாளைக்கு யாருடைய போஸ்டர்
அடுத்து யாருடைய போஸ்டரை வெளியிட போகிறார்கள். அருள்மொழி வர்மனின் போஸ்டரை தான் நாளை வெளியிட போகிறார்கள் என ரசிகர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் படத்தின் டீசர் ரிலீஸ் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகி அனைவரையும் அசர வைத்துள்ளது.

ஜுலை 8 ல் டீசர் ரிலீசா
லேட்டஸ்ட் தகவலின் படி ஜுலை 8 ம் தேதி சென்னையில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் டீசர் வெளியிடப்பட உள்ளதாம். இதில் படத்தில் யாரெல்லாம் எந்த கேரக்டரில் நடிக்கிறார்கள் என்ற விபரத்தை படக்குழு வெளியிட உள்ளதாம். படத்தில் நடித்தவர்களும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.