புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் தவசியிடம் போனில் பேசிய ரஜினிகாந்த்.. தீயாய் பரவும் தகவல்!
சென்னை: புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் தவசியிடம் நடிகர் ரஜினிகாந்த் போனில் தொடர்பு கொண்டு பேசியதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது.
கிழக்கு சீமையிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் தவசி. வருத்தப்படாத வாலிபர் சங்கம், கருப்பன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு அப்பாவாகவும் சாமியாடியாகவும் நடித்திருப்பார். அந்தப் படத்தில் கருப்பன் குசும்புக்காரன் என்று அவர் பேசும் டயலாக் பெரும் பிரபலம்.

எலும்பும் தோலுமாய்
இந்நிலையில் நடிகர் தவசி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். உடல் எடை குறைந்து ரொம்பவே மெலிந்து போயிருக்கும் தவசி, மீசை தாடி இல்லாமல் மொட்டையடித்து ஆளே அடையாளம் தெரியாமல் எலும்பும் தோலுமாய் உள்ளார்.

ரசிகர்கள் அதிர்ச்சி
மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் கஷ்டப்படும் தவசியின் போட்டோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அதனை பார்த்த ரசிகர்கள் நடிகர் தவசியா இது என அதிர்ச்சி அடைந்தனர்.

நடிகர்கள் உதவி
இதனை தொடர்ந்து தன்னுடைய மருத்துவ செலவுக்கு உதவி வேண்டும் என தவசி வேண்டுகோள் விடுத்த வீடியோ வெளியானது. அதனை பார்த்த நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி மற்றும் சூரி ஆகியோர் அவருக்கு நிதியுதவி செய்தனர்.

போனில் பேசிய ரஜினி
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், புற்றுநோயால் சிகிச்சை பெற்று வரும் தவசியிடம் தொலைபேசி மூலம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு அளிக்கப்பட்டு கொண்டிருக்கும் சிகிச்சை முறை குறித்தும், தற்போதைய அவருடைய நிலை குறித்தும் கேட்டறிந்ததோடு, விரைவில் நீங்கள் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தவசிக்கு சிகிச்சை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசியில் பேசி தவசி விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து இருப்பது அவரது குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் தவசிக்கு திமுக எம்எல்ஏ சரவணன், தனது மருத்துவமனையில் சிகிச்சை வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











